Mother's March

அன்னையர் அணிவகுப்பு / அன்னையர் பேரணி

தமிழ் விளக்கம்

அன்னையர் தினத்தன்று வறுமைக்கு எதிராக, துப்பாக்கிக் கட்டுப்பாடுகள் கொண்டுவரவேண்டி, இனத்துவேசத்திற்கு எதிராக இன்னும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மகளிர் நடத்தும் பேரணிகளைக் குறிக்க பயன்படுத்தப்படும் பொதுச் சொல்.
பார்க்க: March of Dimes - வெள்ளி நாணயங்களுடன் அணிவகுத்து வாரீர் - அமெரிக்க ஜனாதிபதியான பிராங்க்லின் ரூஸ்வெல்ட் அவர்களால் 1938 ஆம் ஆண்டு இளம்பிள்ளை வாதத்தை ஒழிக்க தேசிய இளம்பிள்ளை வாதத் தடுப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. போலியோவை ஒழிக்க அமெரிக்காவின் குழந்தைகள் 10 சென்ட் வெள்ளி நாணயத்தை நன்கொடை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். இளம்பிள்ளை வாதத் தடுப்பூசிகளால் போலியோ ஒழிந்த பிறகு, இந்த அமைப்பின் குறிக்கோள் குழந்தைகளையும் தாய்மார்களையும் மையப்படுத்தி விரிவடைந்தது. தாய்மார்களுக்கு ஏற்படும் கர்ப்பகால குறைபாடுகள், குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக் குறைபாடுகளைத் தவிர்த்தல், குறைப்பிரசவ மற்றும் எடை குறைந்த குழந்தைகளின் நலன் என்று விரிவடைந்தது. இது இலாபநோக்கற்ற தொண்டு நிறுவனமாதலால், நிதி திரட்டும் பொருட்டு அமெரிக்க மக்கள் வெள்ளி நாணயங்களுடன் அணிவகுத்து வரக் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். நிதி குறைந்தவர் வழங்கும் காசுகளாலே இந்நிறுவனம் செயல்படுகிறது.

English

See March of Dimes.