Mothers Against Drunk Driving (MADD)

குடித்துவிட்டு வாகனம் ஒட்டுவதற்கெதிரான தாய்மார்கள் (அமைப்பு)

தமிழ் விளக்கம்

மது அருந்தி வாகனம் ஒட்டிய ஒருவரால் தன்னுடைய 13 வயது மகள் இறந்ததைக் கண்ட கேண்டீஸ் லைட்னர் என்ற தாயால் உருவாக்கப்பட்ட தொண்டு நிறுவனம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கக் கோரியும், கடுமையான தண்டனைகளை வலியுறுத்தியும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தனிமனித இழப்பு, பொருளாதார இழப்பு போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வுக் கல்வியையும் இந்த நிறுவனம் தேசம் தழுவி செய்துவருகின்றது.

English

A national organization established in 1980 to influence legislation, police activity, judicial decisions, punishment, prevention, and education pertaining to the operation of motor vehicles while under the influence of alcohol or drugs.