motivation
உந்துவித்தல், உந்துகை, ஊக்கம், தன்முனைப்பாற்றல், உள்நோக்கம், வினைவேகமாற்றி
தமிழ் விளக்கம்
ஒரு செயலைச் செய்யவோ, பொறுப்பை நிறைவேற்றவோ, வேலையில் ஈடுபாடு கொள்ளவோ, அல்லது ஒரு குறிக்கோளை அடையவோ தொடர்ந்து முயற்சிக்குமாறு ஒருவரைத் தூண்டும் அகம் மற்றும் புறக்காரணிகளை உந்துவித்தல் என்கிறோம். ஊக்கம் என்பது ஒரு செயலைச் செய்துமுடிக்க வேண்டிய விருப்பம் அல்லது தேவை / கட்டாயம். ஒரு செயலைச் செய்து முடிப்பதால் கிடைக்கும் ஆதாயம் அல்லது பாராட்டு, சுய மற்றும் சுற்றுப்புற எதிர்பார்ப்புகள் போன்ற பல காரணங்கள் ஒன்றுடன் ஒன்று, பிரக்ஞையோடோ அல்லது பிரக்ஞையற்றோ வினையாற்றி ஒரு செயலைச் செய்யத் தூண்டும் அல்லது வற்புறுத்தும் உள்ளுணர்வே ஊக்கமெனப்படும். ஊக்கமென்பது அனைத்து நடத்தைகளுக்கும் ஆதாரமாக விளங்குவது. ஊக்கம் நம் செயல்களையும், உணர்வுகளையும் முடுக்கிவிடும். இலக்கு நோக்கிப் பயணிக்க நம் நடத்தைகளை நெறிப்படுத்திச் செல்லும். ஆகையால், ஊக்கம் என்பதைக் குறிக்கோளை நோக்கிய முனைப்பான நடத்தை எனலாம். மனிதர்கள் செய்கின்ற காரியம் ஒன்றுபோல் தோன்றினாலும், அந்தக் காரியத்திற்குப் பின்னால் இருக்கும் உந்து சக்தி பலவாக இருக்கும். ஒவ்வொரு செயலிலும் ஊக்கம் என்பது நேரிடையாவோ, மறைமுகமோ நிலை பெற்றிருக்கும். பாராட்டு, பெருமை, புகழ் போன்ற பல காரணங்கள் ஊக்கத்தின் வித்துக்களாகத் திகழ்கின்றன. ஊக்கம் உள்ளூக்கம், வெளியூக்கம் என இருவகைப்படும். உள்ளிருந்தே குறிக்கோளை நோக்கிச் செல்லத் தூண்டுகின்ற காரணிகள் உள்ளூக்கம் எனப்படும். உள்ளார்ந்த ஆர்வம், விருப்பு, தேவை, மனப்பாங்கு, கவலை ஆகியன உள்ளுக்கத்தைத் தூண்டுவன. பாராட்டு, வெகுமதி, கட்டாயம், பிறரை வெற்றி கொள்ள நினைக்கும் மனோபாவம் வெளியூக்கம் எனப்படும்.
ஊக்கமென்பது தனிமனிதர்கள் வாழ்விலும், சமுகப் பொருளாதாரத் துறையிலும் பயன்மிக்க விளைவுகளை ஏற்படுத்துவதால், எது மனிதர்களை ஊக்குவிக்கும், மனிதர்களை ஊக்குவிக்க என்ன செய்யலாம் என்பது பற்றி ஆய்வுகளும், கோட்பாடுகளும் உள்ளன. ஊக்கம் பற்றிய கோட்பாடுகள் இரண்டு வகைப்படுகின்றன. 1. ஊக்கத்தின் உள்ளடக்கம் பற்றியது (content theories) எதுவெல்லாம் மக்களை ஊக்கபடுத்துகிறது என்பதை விளக்கும் கோட்பாடுகள் ஒரு வகை. 2. ஊக்கம் கொள்வதற்கு எந்த மாதிரியான காரணிகளை மக்கள் தேர்ந்தெடுக்கின்றார்கள் (process theories) என்பது இரண்டாம் வகை. முதல் வகையில் மாஸ்லோவின் தேவைப் படிநிலைகள் (Hierarchy of Needs), கிலேட்டன் அல்டெர்பேரின் ERG கோட்பாடு (Existential வாழ்வதற்கான தேவை, Relatedness need உறவாடலுக்கான தேவை, Growth Needs வளர்ச்சிக்கான தேவை, 3. ஹெர்ஸ்பெர்க்கின் இருகாரணக் கோட்பாடு (ஊக்கத்திற்கான ஆரோக்கியச் சூழ்நிலை (Hygiene factors), ஊக்கிகள் (motivators) 4. டேவிட் மெக்கிளிலண்ட் சாதிப்பதற்கான தேவை (Need for achievement), அதிகாரம் செலுத்துவதற்கான தேவை (need for power), இணைந்திருப்பதற்கான தேவை (need for affiliation) - இந்த நான்கும் உள்ளடக்கம் சார்ந்ததாகும். இரண்டாவதாக ஊக்கம் செயல்படும் விதம் 1. விக்டர் விரூமின் (Victor H. Vroom) எதிர்பார்ப்பு கோட்பாடு (Expectancy Theory), 2. எட்வின் லாக் (Edwin Locke) என்பவரின் குறிக்கோள் ஊக்கிகள் (Goal setting theory) 3. ஜான் ஆடம் என்பவரின் முயற்சிக்கும் பலனுக்குமான சமநிலைக் கோட்பாடு (Equity theory), 4. மெக் கிரீகரின் இருவகையான மனித வகைகள் பற்றிய, மனிதன் தூண்டப்பட்டு கொண்டே இருக்கவேண்டும், (X theory) மனிதர்கள் சுபாவத்திலே தன்னூக்கத்துடன் செயல்படுபவர்கள் (Theory Y). இந்த நான்கும் ஊக்கம் செயல்படும் விதம் பற்றியது தமிழ் கலாச்சாரச் சூழ்நிலையில் ஊக்கமுடமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது திருக்குறளில் இருந்து அறியலாம். ஊக்கமுடமை என்ற அதிகாரத்தில் (எண் 60) ஊக்கத்தின் சிறப்பு வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

English
A set of physical drives, desires, attitudes, and values that arouse and direct behavior toward the achievement of some goal.