motorcoach therapy
பேருந்து சிகிச்சை
தமிழ் விளக்கம்
ஏழையான, கவனிப்பதற்கு ஆளில்லாத, காப்பீடு வசதி ஏதுமில்லாத, மனநல மருத்துவமனைகளால் சிகிச்சையளிக்க முடியாத, கையாளமுடியாத மனநோயாளிகளை பேருந்தில் ஏற்றி அவர்கள் மீண்டும் வரமுடியாத தொலைதூர இடங்களில் இறக்கிவிட்டு வந்துவிடுவது. இது தொழில் நெறிகளுக்கு விரோதமாயினும், அந்த நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் அவர்களுக்குப் பரிந்துரை செய்வதிலும் ஏற்பட்ட சோர்வின் விளைவாக ஏற்படுவது.
பார்க்க; referral fatigue therapy - பரிந்துரைத்தலே சிகிச்சை முறையாவதால் ஏற்படும் அயர்ச்சி - தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களையெல்லாம் பிறரிடம் செல்லப் பரிந்துரைப்பதை வாடிக்கையாகக் கொள்ளும் பட்சத்தில், வாடிக்கையாளர்களே பரிந்துரை தேவைப்படாதவாறு தாங்களே மாற்று வழிகளைத் தேடிக்கொள்ளும் முறை. இது ஒரு சமூகப்பணியாளர் தன்னுடைய பணிச்சுமையைக் குறைத்துக்கொள்ள உதவினாலும், வெற்றிகரமாகத் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு உதவி இருக்கின்றார் என்று புள்ளிவிவரங்களைக் காட்டினாலும், அதற்கு மாறாக, உண்மையில் சமூகப்பணியாளரின் இயலாமையை மறைமுகமாக எடுத்துக்காட்டுவதாகும்.

English
The unethical practice of prematurely discharging patients from mental health facilities and discouraging their return by providing them with one-way bus tickets to distant locales. Usually such patients have no money or insurance and are difficult for the clinic to treat or manage. See also "referral fatigue therapy."