mourning
இரங்கல், துயருறுதல், துக்கிப்பு, வருத்தம், கவலையுற்ற
தமிழ் விளக்கம்
துயரம் அல்லது துக்கம் என்பது ஈடு செய்ய முடியாத இழப்பினால், குறிப்பாக நெருக்கமானவர்களின் மரணத்தால் ஏற்படும் துயர உணர்வாகும். இழப்பினால் வரும் ஆழ்ந்த துயரம், மற்ற உடல் மற்றும் மன நோயைப் போன்று அறிகுறிகள் கொண்டிருந்தாலும், காலப்போக்கில் அதிலிருந்து ஓரளவோ அல்லது முழுமையாகவோ விடுபடமுடியும். பால் எக்மேன் (Paul Ekman) தொகுத்தளித்த மனிதரின் ஆறு அடிப்படையான உணர்வுகளில், (இன்பம், கோபம், ஆச்சரியம், பயம், வெறுப்பு) துக்கமும் ஒன்று. துக்கத்தை மனிதர்கள் பலவிதங்களில் வெளிப்படுத்துவர். அமைதியாக யாரிடமும் பேசாதிருப்பர், தனிமையை நாடுவர், சோம்பலாக இளைப்பாற முடிவெடுப்பர், அழவும் செய்வர். வருத்தமுற்றவர் அந்த வருத்தத்தைப் பல நிலைகளிலே கடக்க முடியும். எலிசபெத் கூபர் ராஸ் என்ற உளப்பிணி நிபுணர் மனிதர்கள் தங்கள் வருத்தத்திலிருந்து மீண்டெழும் நிலைகளைக் குறித்துள்ளார். அவையாவன 1. இழப்பை மறுத்தல் (Denial), 2. இழப்பு ஏற்படுத்திய இயலாமையால் ஏற்படும் ஆத்திரம் (Anger), 3. இழப்பை உணர ஆரம்பித்து தன்னிடமுள்ள பிறவற்றால் அவ்விழப்பை ஈடுகட்ட முனைதல் (Bargaining), 4. எதிர்பார்த்த வேகத்தில் இழப்பை ஈடுகட்ட முடியாதபோது ஏற்படும் விரக்தி (Depression), 5. இழப்பை ஏற்றுக்கொண்டு வாழப் பழகிக்கொள்ளல் (Acceptance)
English
The psychological and cultural process of expressing sorrow about loss of a loved one; breaking the emotional tie with that loved one; and gradually reinvesting the emotional energy in other people, activities, or things. See also bereavement and grief.