movement disorders
இயக்கம் / நடமாட்டச் சீர்கேடு
தமிழ் விளக்கம்
மருத்துவக் காரணங்களாலோ, போதையின் விளைவாகவோ, உடலியல் காரணங்களாலோ அல்லது மன நோயின் விளைவாகவோ வழக்கத்திற்கு மாறாகவும், தொடர்ந்தும் வெளிக்காட்டப்படும் சைகைகள், முக பாவனைகள் மற்றும் அங்கஸ்திதி போன்றவை நடமாட்டச் சீர்கேடு எனப்படும். இந்த மாதிரியான இயக்கங்களை / நடமாட்டத்தைப் பார்த்தே ஒரு மனிதர் என்ன மாதிரியான நலக்குறைவிற்கு உள்ளாகி இருக்கின்றார் என்பதை நிபுணர்களால் அறிந்துகொள்ள முடியும். வெளிப்படையாகத் தெரியும் நடமாட்டச் சீர்கேடுகளில் முக்கியமானவை. 1.choreiform movements, உடல் அல்லது மனக்கோளாறினால் ஒழுங்கற்ற முறையில் திரும்பத் திரும்ப விரைவாக உதறலுடன் செய்யப்படும் உடலசைவுகள் - நரம்புக் கோளாறினால் வரும் அசாதாரணமான நடனம் போன்ற உடலசைவுகளைக் கொண்ட தசை வலிப்பு நோய். 2. dystonic movements தானாயியங்குந் தசைச் சுருங்கல், வலியேற்படுத்தும் தசைச் சுருக்கம், தசை வலித் துடிப்பு, அடிக்கடி உணர்விழப்புடன் கூடிய உன்மைத்தம் என்று பல அறிகுறிகளைக் கொண்ட கோளாறு. 3. athetoid movements உறுப்பு ஒத்தியங்காமை, தள்ளாட்ட நடை 4. myoclonic movements திடீர்த்தசைச் சுருக்கம் 5. spasms தசைபிடிப்பு 6. synkinesis தன்விருப்பமற்ற இயக்கத்துடன் தன்னார்வமும் இணைந்த இயக்கச் சீர்கேடு ஆகியவை முக்கியமானவையாகும்.
English
Unusual and persistent gestures, expressions, postures, and movements believed to be the result of medical conditions, effects of substances, or physiological or mental disorders. A professional can often begin to determine the type of problem by observing such movement patterns. Some of the more notable ones identified include choreiform movements, dystonic movements (slow twisting interspersed with prolonged muscle tension), athetoid movements (slow, irregular writhing, mostly in the fingers and toes), myoclonic movements (brief, shocklike muscle contractions), spasms (sterotypic, slower, and more prolonged movements involving muscle groups), and synkinesis (involuntary movements accompanying voluntary ones). See also medication-induced movement disorders and stereotypic movement disorder.