muckrakers
சேற்றை வாரி இறைப்பவர்கள், புழுதி வாரி இறைப்பவர்கள்
தமிழ் விளக்கம்
மக்களை இடர்பாட்டிற்குள்ளாக்கும், சுரண்டும் அரசியல் மற்றும் பெருநிறுவனங்களின் விதிமீறல்கள், நியாயத்திற்குப் புறம்பான நடத்தைகள், ஊழல் போன்றவற்றை பொதுமக்கள் உணரும்படி வெளிக்கொண்டுவந்த பத்திரிகையாளர்கள், மேடைப்பேச்சாளர்கள், கிளர்ச்சியாளர்கள் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்களைக் குறிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் ஏளனமாகப் பயன்படுத்திய வார்த்தை. ஊழல்களை வெளிச்சம் போட்டுக்காட்டிய இந்த முயற்சி அமெரிக்காவில் 1900 1915 வரை மிக வலிமையாகச் செயல்பட்டு, அதற்குப் பின்னான முற்போக்கு சகாப்தத்தில் சமூகச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க வழிகோலியது. இப்பொழுதும் கூட சமூக, பொருளாதார, அரசியல் முறைகேடுகளை வெளிக்கொணர்ந்து சமூகச் சீர்திருத்த முயற்சிகளில் ஈடுபடும் சமூகப்பணியாளர்கள், புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் இந்தப் பெயராலே அழைக்கப்படுகின்றனர்.
English
The name first used by President Theodore Roosevelt to describe a group of journalists, speakers, agitators, and social activists who sought to make the public aware of abuses, unethical practices, and corrupt business and political activities that exploited and endangered people. The muckraking movement was especially prominent in the United States from 1900 to 1915 and resulted in many of the social reforms of the Progressive Era. The term is still used and often applied to social workers, writers, investigative reporters, and other reform-minded people who call attention to current examples of abuse and corruption.