multifactorial inheritance

பன்முக மரபுப்பண்பு பெறுதல், பிறவிக் குறைபாட்டிற்கு பன்முக மரபுப் பண்புகள் காரணமாய் அமைதல்

தமிழ் விளக்கம்

இது மரபணுப் பண்பினாலோ அல்லது சூழ்நிலைத் தாக்கத்தினாலோ, பெற்றோர் இருவரின் மரபணுக்களின் கூட்டுத் தன்மையாலோ, அறியப்படமுடியாத புறக்காரணிகளாலோ, ஒரு குறைவுபட்ட கூறோ அல்லது தன்மையோ ஏற்படும் நிலை. இந்த மரபணுப் பண்புகள் வித்தியாசமாக வெளிப்பட்டு, ஒரு பாலினக் குழந்தைகளே அந்தத் தன்மையை அதிகமாகப் பெறுகிறார்கள். உதாரணமாக, இடுப்புப் பிறழ்வு (dysplasia) ஆண்களை விட பெண்களுக்கு ஒன்பது மடங்கு அதிகமாக இருக்கிறது.
பார்க்க: Genetic Disorders - மரபணு, மரபணுக்கூறுகள், குரோமோசோம்கள் குறைவுபட்டாலோ, அதில் கோளாறு இருந்தாலோ வரும் நோய். இந்தக் குறைபடுகள் நான்கு வகையானது. 1. ஒற்றை மரபணுவில் ஏற்படுகின்ற குறைபாடு. சிறுநீர் / பித்தநீர்ப்பை கட்டிகள் (cystic fibrosis) சிக்கில் செல் இரத்த சோகை, தே, சாக்ஸ் நோய், ஹன்டிங்டன் நோய், மார்ஃபேன் நோய்க்கூறு, இரத்த ஒழுக்கு, மற்றும் டுசென்னெ தசைநார் தேய்வு போன்ற நோய்கள் 2. பல மரபணுக்களின் குறைபாடும், சூழலும் இணைந்து உருவாக்கும் நோய்கள். பிளந்த அண்ணம் (உதடு), ஸ்பைனா ஃபிபிதா, பிறவி இதய நோய், மற்றும் மூளை வளர்ச்சி பாதிப்பு. 3. குரோமோசோம்கள் கட்டமைப்பிலும், எண்ணிக்கையிலும் ஏற்படும் பிறழ்ச்சி. இதனால் கருச்சிதைவு, குழந்தை இறந்தே பிறப்பது, பிறந்த குழந்தைக்கு மரணம், பிறவி குறைபாடுகள் மற்றும் டவுன் நோய்க்குறி ஏற்படும். 4. சூழ்நிலையாலும் (தொற்றுநோய், சூழல் மாசு) பழக்கவழக்கங்களாலும் (மது, புகையிலை, சிலமருந்துகளின் ஒவ்வாமை) மரபணுவில் ஏற்படும் கோளாறு.

English

See genetic disorder.