multifinality

ஒன்று பலவாகும் நிலை

தமிழ் விளக்கம்

ஒரு காரணம் சூழ்நிலையைப் பொறுத்தும், நபர்களைப் பொறுத்தும் பலவிளைவுகளை ஏற்படுத்தும் நிலை Multifinality - (ஒன்றாய் அரும்பி, பலவாய் விரியும் நிலை அபிராமி அந்தாதி பாடல் 56). ஒருவிளைவு பல காரணங்களிலிருந்து உருவாகும் நிலை (Equifinality). காரண காரியத் தொடர்புகளைப் பற்றிப் பேசும் இந்தக் கருத்தாக்கம் வளர்ச்சிப் பணிகளில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. பல்வேறு அணுகுமுறைகள் (காரணங்கள்) ஒரு விளைவை ஏற்படுத்துவதும், ஒரு அணுகுமுறை பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துவதும் திட்டமிடும் போது கவனத்துடன் செயல்படத் தூண்டியிருக்கின்றது. எடுத்த்க்காட்டாக, சமூகப்பணி கற்பித்தல் முறையில் (pedagogy), ஒரு விளைவை (சமூகப்பணியாளர் போல் சிந்திக்க செயல்பட) ஏற்படுத்த, வகுப்பறை போதனை, களப்பணி, ஆய்வு போன்று பல்வேறு போதான முறைகளைக் கையாள்வதும், ஒரு முறையை உபயோகித்து (வகுப்பறை போதனை) பல்வேறு விளைவுகளை உருவாக்கவும் பல சமூகப்பணிக் கல்வியாளர்கள் முயன்று வருகின்றனர்.
பார்க்க: சம இறுதிநிலை - உயிரனங்களைப் பொறுத்தவரை வழிமுறைகள் வேறாயினும் எல்லா வழிகளும் இறுதியில் ஒரே விளைவையே அளிக்கின்றது என்ற கருத்து. எல்லா சாலைகளும் ரோமாபுரியை நோக்கியே செல்கிறது என்பதைப்போல (different paths can take one to the same goal).

English

The systems theory concept in which subsystems have identical beginnings or origins but achieve different outcomes. This term is synonymous with equipotentiality and the opposite of equifinality.