multineeds clients

பன்முகப் பிரச்சனையுள்ள, பன்முகத் தேவையுள்ள வாடிக்கையாளர்

தமிழ் விளக்கம்

சமூகப்பணியாளரின் உதவியை நாடும் வாடிக்கையாளர் ஒரே நேரத்தில் பல பிரச்சனைகளுக்கு உள்ளானவராக இருப்பர். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறையும் உதவியும் தேவைப்படுமென்பதால் ஒன்றிற்கு மேற்பட்ட சமூகப்பணியாளரின் சேவை தேவைப்படும். சமூகப்பணி வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் பன்முக பிரச்சனைகளோடு வருவதால் அவர்களுக்கு உதவ பலசேவைகளையும் பல நிறுவனங்களையும் ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம்.

English

People who seek the social worker's services because of the simultaneous existence of problems. Usually the different problems require the skills and resources of more than one worker or agency. Because multineeds clients constitute a high percentage of the social work clientele, the need for coordination of services and agencies is increasing.