multiple-drug use

பல மருந்துப் பயன்பாடு

தமிழ் விளக்கம்

பல மருந்துப் பயன்பாடு என்பது பல அறிகுறிகளைக்கொண்ட ஒரு நோய்க்கு ஒவ்வொரு அறிகுறியையும் கட்டுப்படுத்தப் பலமருந்துகளை பரிந்துரை செய்வது என்று பொருள் கொள்ளப்பட்டாலும், நடைமுறையில் இது பல போதை மருந்துகளை ஒருசேர உபயோகிப்பதையே குறிக்கிறது. உளக் கிளர்ச்சியின் பொருட்டு போதை மருந்து உபயோகிப்பவர்கள், பிரதான போதை மருந்தோடு, மது, தூக்க மாத்திரைகள், உளமடக்கிகள் போன்ற பல்வேறு மருந்துகளையும் பயன்படுத்தி, பிரதான மருந்து தரும் அதீத உளக்கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தவோ இல்லை அதிகரிக்கவோ வேறு மருந்துகளையும் எடுத்துக்கொள்ளும் பழக்கம் பரவி வருகிறது. பலமருந்துப் பழக்கம், போதைப் பழக்கத்திலிருந்து விடுவிக்கும் சிகிச்சை முறையைச் சவாலுக்குள்ளாக்கி இருக்கின்றது. எடுத்த்க்காட்டாக கஞ்சாப் பழக்கத்திலிருந்து விடுபடக் கொடுக்கப்படும் சிகிச்சையின் போது ஏற்படும் விலக்கு அறிகுறிகள் (withdrawl symptoms), அமைதியுண்டாக்கிகள் (barbiturate) மருந்துப் பழக்க விலகல் அறிகுறிகளைத் தரும் போது சிகிச்சை முறை சிரமமாகிறது. ஆகையால் போதைப் பழக்க அடிமையினர் என்னென்ன மருந்துகளையெல்லாம் எடுத்துக்கொண்டார் என்று அறிந்துகொள்வது முக்கியமாகிறது.

English

The simultaneous abuse of two or more drugs, often with a mix of symptoms and contradictory progression in the treatment process. For example, when someone is treated for heroin use, the withdrawal effects may be unusual and unpredictable because the client is also going through barbiturate withdrawal. It is important in assessing for drug abuse to determine all the drugs that are or have been in use because of this increasingly common phenomenon.