multiple-impact
பன்முனைத் தாக்கம்
தமிழ் விளக்கம்
பல பிரச்சனைகளுள்ள ஒரு குடும்பத்தின் பிரச்சனைகளைக் கையாள, ஒரு சிறப்புத் தொழில் (professional team) குழுவின் மூலம் சமூகப்பணியாளர்களும் குடும்பச் சிகிச்சையாளர்களும் மேற்கொள்ளும் அணுகுமுறை. இதில் சிறப்புத் தொழிலினர் அடங்கிய குழு, குடும்பத்திலுள்ள பல்வேறு உறுப்பினர்களுடன் குழுவாகவோ, தனியாகவோ தொடர்பாடி, குறைந்த கால அவகாசத்தில் முனைப்பான அக்கறையுடன் அளிக்கும் சிகிச்சை முறை. இம்முறையில் குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு சேர்க்கைகளோடு (மற்றவருடன் இணைந்தும் தனியாகவும்) நிபுணர்களைத் தனியாகவும் கூட்டாகவும் சந்திப்பார்கள்.
English
therapy A team form of treatment used by social workers and other professionals, especially with the multiproblem family. It is typically intensive and relatively short term, with members of the professional team meeting with various subgroups or individuals from the family. Then different subgroups meet with the professionals, and so on, in a variety of combinations.