multiple intelligences

பன்முக நுண்ணறிவு, பன்முக ஞானம், பன்முக அறிவுத்திறம்

தமிழ் விளக்கம்

பன்முக அறிவுத்திறம் என்ற கருத்தாக்கம் அறிவாற்றல் ஆராய்ச்சியாளர் ஹோவர்ட் கார்ட்னர் (Howard Gardner) என்பவரால் முன்வைக்கப்பட்டது. அவர் மனிதர்களிடம் ஏழுவகையான அறிவுத் திறன்கள் இருப்பதாக எடுத்துரைத்தார். 1. மொழி மற்றும் மொழிப் பிரயோகம் சார்ந்த நுண்ணறிவு / சாமர்த்தியம். 2. தர்க்க மற்றும் கணித நுண்ணறிவு / சாமர்த்தியம். 3. காட்சிப்படுத்தல் மட்டும் இடம் சார்ந்த நுண்ணறிவு / சாமர்த்தியம். 4. உடல் மற்றும் உடலியக்கப் பிரக்ஞை சார்ந்த நுண்ணறிவு / சாமர்த்தியம். 5. இசை மற்றும் சந்தம் சார்ந்த நுண்ணறிவு / சாமர்த்தியம். 6. அகம் சார்ந்த, தன்னுணர்வு நுண்ணறிவு / சாமர்த்தியம். 7. பிறருடன் உறவாடும் நுண்ணறிவு / சாமர்த்தியம். ஹோவர்ட் கார்ட்னரின் கூற்றுப்படி எல்லா மனிதர்களுக்கும் இந்த எழுவகையான நுண்ணறிவுத் திறன்கள் இயல்பிலே இருப்பதாகவும், சிலருக்கு இதில் ஒன்றோ இரண்டோ மற்றவர்களை விட முழு வளர்ச்சி பெற்றாதாக இருக்குமென்றார். மானுடச் சூழ்நிலையும், வாழ்க்கை முறையும் இந்தச் சாமர்த்தியங்கள் வளர்வதறகோ ஸ்தம்பித்துப் போகவோ காரணமாக அமைவதுண்டு
பார்க்க: fluid intelligence - நெகிழ் நுண்மதி - பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் பகுத்தறியும் திறன், சிந்தனையை ஒழுங்குபடுத்திக்கொள்ளும் ஆற்றல், பல்வேறு கருத்துக்களை ஒருங்கிணைக்கும் ஆற்றல், உள்ளுணர்வின் மூலமாக ஊகித்தறியும் திறன். இதைத் தொடர்ந்து பயன்பாடுத்தாத பட்சத்தில், படிக நுண்ணறிவு போல் வயதாக வயதாக விரிவடையாமல், குறையும் தன்மை கொண்டது.
crystallized intelligence - திட்டவட்டமான, துல்லியமான, நிரந்தர வடிவம் பெற்ற நுண்ணறிவு. அனுபவ ஞானம் - இது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கிடைக்கிறது. வயதாக வயதாக இந்த நுண்ணறிவு வலுப்பெறும். சமூகமயமாதலிலிருந்தோ, கலாச்சாரத் தொடர்புகளினாலோ, பிறவகையில் பெறப்பட்ட தகவல்களாலோ ஒரு மனிதானுக்கு மன முதிர்ச்சி மற்றும் ஆற்றலைத் தந்து அதைப் பொருத்தமான இடத்தில் பொருத்தமான முறையில் உபயோகிக்கும் திறனைத் தரும் நுண்ணறிவு. இதை அனுபவ ஞானம் எனலாம். வயதாக வயதாக இந்த நுண்ணறிவு திடப்படும் / பெருகும் தன்மை கொண்டது. இதற்கு மாறாக கலாச்சாரத் தொடர்பில்லாத பிரச்சனைகளைத் தீர்க்கும் திடமற்ற / நீர்ம நுண்ணறிவு, வயதாக வயதாகக் குறையும். இது ஏட்டுப்படிப்பினாலும், நினைவுத்திறனாலும் வருவது.

English

A conception about the different types of intelligence made by cognitive researcher Howard Gardner. There are seven distinct types of intelligence: (1) verbal/linguistic, (2) logical/ mathematical, (3) visual/spatial, (4) body/ kinesthetic, (5) musical/rhythmical, (6) interpersonal, and (7) intrapersonal. In this conception, all people have all these intelligences, but not all of them are developed equally; one or more of these intelligences are more fully developed than the others. Any of them may be developed or diminished through various circumstances and life stages. See also fluid intelligence, crystallized intelligence, and constructive intelligence.