multiple-program participation

பல திட்டங்களின் மூலம் பயனடைவோர் / பல திட்டங்களில் பங்குகொள்வோர்

தமிழ் விளக்கம்

இரண்டோ அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நலத்திட்டங்களின் மூலம் பயனடைவோர். எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் ஏழைக் குடும்பங்களுக்கான தற்காலிக உதவித் திட்டம் (Temporary Assistance to Needy Families (TANF) மூலம் உதவி பெரும் பயனாளிகள், மருத்துவ உதவி (medicaid - மருத்துவமனை சென்று சிகிச்சை பெற செலவழிக்க இயலாதவர்கள் என்று தகுதிச் சோதனைகள் மூலம் (குறைந்த வருவாய்ப் பிரிவினர்) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அரசே மருத்துவச் சிகிச்சைக்கான செலவினங்களைத் தந்துதவும் திட்டம்) மற்றும் உணவு அடையாளச் சீட்டு (Food Stamp) பெறவும் தகுதி படைத்தவர்களாகிறார்கள். தற்காலிக உதவித் திட்டப் பயனாளிகள் வீட்டுவசதி பெறவும் தகுதி படைத்தவர்கள். இதே போன்று ஒரு நலத்திட்டப் பயனாளிகள், பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற இயல்பாகத் தகுதி பெற்றவர்களாகிறார்கள். ஆனால் ஒவ்வொரு திட்டமும் வெவ்வேறு அரசுத் துறைகளின் மூலம் நிர்வகிக்கப்பட்டு, ஒவ்வொரு திட்டத்திற்கும் பயனாளிகள் தகுதி வெவ்வேறாக வரையறுக்கப்பட்டு, வெவ்வேறு இடங்களில் செயல்படும் அலுவலகங்கள் மூலம் நிர்வகிக்கப்படுவதால், வெவ்வேறு இடங்களிலுள்ள அலுவலகங்களில், வெவ்வேறு அதிகாரிகளைச் சந்தித்து, அவர்களுக்குச் சேரவேண்டிய நலத்திட்ட உதவிகளைப் பெரும்படியான கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள்.

English

The involvement by clients in two or more social welfare services simultaneously. For example, in the United States most of those who received Temporary Assistance to Needy Families (TANF) might also be eligible for Medicaid and food stamps; some TANF recipients might also qualify for housing assistance. Many other programs also exist and are needed and used by people, yet each program has a different bureaucracy to manage it, has unique rules for becoming eligible, and the agencies are often located far apart. Clients often must go to different locations and go through different workers using different rules to get all the benefits to which they are entitled.