multiple sclerosis
மூளை, தண்டுவட மரப்பு நோய், (உடலில் உள்ள) திசுவின் ஒரு பகுதி இறுகிப் போதல், திசு தடிமனாதல், அணும உள்ளரிக் காழ்ப்பு, இழையவன்மை
தமிழ் விளக்கம்
தண்டுவட மரப்பு நோய் அல்லது மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் (Multiple sclerosis - சுருக்கமாக எம்.எஸ், மற்றும் பரவிய ஸ்களீரோசிஸ் அல்லது என்செபலோமையிலடிஸ் டிஸ்ஸேமினாடா எனவும் அழைப்பர்) என்பது மூளை மற்றும் முதுகுத்தண்டை மூடியுள்ள கொழுப்பான மையிலீன் (myelin) உறையில் ஏற்படும் நோயாகும். இந்நோயால் மையிலீன் உறையழிந்தோ, பாதிப்படைந்தோ அல்லது வடுக்களுடனோ பல்வேறு நோய் அறிகுறிகளுடன் காணப்படும். இந்நோய் பெரும்பாலும் இளம் வயதினரையும் அதிலும் பெண்களையே தாக்குகின்றது. இது தோராயமாக ஒரு இலட்சம் நபர்களில் 2 இலிருந்து 150 பேர் வரை காணப்படுகின்றது. எம்.எஸ்ஸை முதன்முதலில் ஜீன்-மார்டின் சார்காட் 1868ல் குறிப்பிட்டுள்ளார். எம்.எஸ் நரம்பு செல்கள் மூளை மற்றும் முதுகுத் தண்டுக்கிடையே கொண்ட தொடர்பை பாதிக்கிறது. நரம்பு செல்கள் மையிலீன் உறையால் மூடப்பட்ட நீண்ட நார் போன்ற ஆக்ஸான்கள் மூலம் மின்னூட்டச் செயல்திறன் கொண்டு செய்திகளைப் பரப்புகின்றது. எம்.எஸ் நோயின் போது உடலின் நோய்த் தடுப்பாற்றலே (auto immune) மையிலீனைத் தாக்குகின்றது. இவ்வாறு மையிலீனை இழந்த ஆக்சான்களால் செய்திகளைக் கடத்த முடிவதில்லை. மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் என்ற பெயர் (ஸ்களீரோசிஸ் என்பது கட்டி அல்லது ரணத்தைக் குறிக்கும்) மூளை மற்றும் முதுகுத்தண்டை சுற்றியுள்ள வெள்ளைத் திசுக்களில் அதாவது மையிலீன் உறையில் ஏற்படும் வடுக்களேயாகும். நோய் ஏற்படும் விதங்கள் நன்றாகத் தெரிந்திருந்தாலும், அதை ஏற்படுத்தும் காரணிகள் இதுவரை தெளிவாகவில்லை. இது மரபணு அல்லது தொற்று நோய்கள் காரணமாக அமையலாம் என்று ஊகிக்கப்படுகிறது. மேலும் இந்நோயை ஏற்படுத்தும் பல சுற்றுச் சூழல் அபாயக் காரணிகளையும் கண்டறிந்துள்ளனர். இந்நோயால் நரம்பு சம்பந்தப்பட்ட எந்தவித அறிகுறியும் தோன்றலாம், இதனைத் தொடர்ந்து உடல், அறிவாற்றல், உடல் ஊனம் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட மனவளர்ச்சி ஆகியவை பாதிக்கப்படலாம். எம்.எஸ் இரண்டு வகைகளில் ஏற்படுகின்றது, முதலாவது, அவ்வப்போது புது அறிகுறிகளுடன் திடீரென தோன்றும் விதம் ஒன்று (திரும்பும் வகை). மற்றொன்று காலப்போக்கில் மெதுவாக வளர்வது (வளரும் வகை) ஆகும். பொதுவாகத் திடீரெனத் தோன்றி மறையும் வகையில் இரு நிகழ்வுகளுக்கு இடையே அறிகுறிகள் முழுவதாக மறைந்து விடும், ஆனால் நோய் வளர வளர நிரந்தரமாக நரம்பில் பாதிப்பு ஏற்படுகின்றது. எம்.எஸ்ஸை குணப்படுத்த எவ்வித மருந்தும் இல்லை. சிகிச்சைகள் பொதுவாக மீண்டும் முன்பு போல் செயல்புரியவும், புதிதாக நிகழ்வுகள் ஏற்படாமல் இருப்பதற்கும், மற்றும் உடல் ஊனம் ஏற்படாமலிருக்கவுமே அளிக்கப்படுகின்றது. எம்.எஸ் மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்துவனவாகவும் உடல் ஏற்காத் தன்மையுடனும் இருப்பதால் பல நோயாளிகள் சரியான ஆய்வு செய்யப்படாத வேறு சிகிச்சைகளையும் மேற்கொள்கின்றனர். இந்நோய் வருமுன் அறிவது மிக கடினமாகும்.
English
A slowly progressive disease of the central nervous system (CNS) that usually begins to affect its victims during their twenties. The symptoms may include some of the following: paralysis or numbness of various parts of the body, convulsions, visual and speech disorders, emotional problems, bladder control disturbances, and muscular weakness. The symptoms have a tendency to increase and decrease in severity at varying intervals.