multiple-stressor debriefing (MSD)

பன்முக நெருக்கடிக்கு உள்ளானவர்களிடம் விபரம் அறிதல்

தமிழ் விளக்கம்

நெருக்கடிகால நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்கு பலவிதமான நெருக்கடிகளும், மனஅழுத்தங்களும் உண்டாகும். அந்த நெருக்கடிகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் போது, ஒரு நெருக்கடியை சமாளிக்க அவர்கள் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்கள், அதில் எது பயனுடையாய் இருந்தது, எது பயனற்றதாய் இருந்தது, அவர்கள் எதிர்கொண்ட சவால்களை எப்படிக் கையாண்டார்கள் போன்ற விவரங்களை ஒரு குழுச் சூழலில் பகிர்ந்துகொள்ளும் போது அவர்கள் அடுத்துவரும் நெருக்கடிகளைத் திறனுடன் சமாளிப்பதற்கான ஆற்றல் பெறுகிறார்கள். இது அபாய நெருக்கடிக்கு உள்ளானவர்களிடம் (critical incident stress debriefing (CISD) விவரம் அறியும் முறை போன்றதென்றாலும், அது ஒரே அமர்வில் முடியும் குறுகிய கால அணுகுமுறை. இது அதிர்ச்சிக்கு உள்ளானவர்களிடம் (traumatic event debriefing (TED) விவரம் அறியும் முறை போன்றதென்றாலும் அது ஒரு சம்பவத்தை குறித்து மட்டும் செய்யும் அணுகுமுறையாகும்.

English

A form of debriefing in which participants in crisis situations meet with interviewers individually or in groups soon after the stressful event to discuss their involvement as well as their effective and ineffective coping strategies and common reactions. Originated for disaster relief operations personnel, the purpose is to better prepare for future crisis situations and to help the participants overcome reactions to experiencing many stresses within a short time period. MSD is similar to critical incident stress debriefing (CISD), except that the latter occurs usually in a one-session intervention in a group format only. It is similar to traumatic event debriefing (TED), except that the latter focuses on only one stressor event.