multiproblem family
பலபிரச்சனைகளுள்ள குடும்பம்
தமிழ் விளக்கம்
ஒரே நேரத்தில் பல்வேறு சமூக, பொருளாதார, ஆளுமைச் சிக்கல்கள் நிறைந்த பல உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம். ஒற்றை பெற்றோர் குடும்பங்கள், குறைந்த கல்வியறிவு, குறைந்த வருவாய்க் குடும்பங்கள், போதைப் பழக்கத்திற்கு ஆளான குடும்பங்கள் பல்வேறு மன அழுத்தங்களால் குழந்தைகளிடமும், தம்பதிகளிடமும் இளிவாக, நெறியற்ற வகையில் நடந்துகொள்ள வாய்ப்பு அதிகமுள்ள குடும்பங்கள், பல பிரச்சனைகளுள்ள குடும்பங்கள் எனப்படுகின்றன. இம்மாதிரியான குடும்பங்களைக் கையாளும் சமூகப்பணியாளர்கள் பல்வேறு அணுகுமுறைகளையும், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நிபுணர் உதவிகளைக் கையாண்டு பிரச்சனையைத் தீர்க்க முயல்வர்.
பார்க்க: Multiimpact theory - பன்முனைத் தாக்கம் - பல பிரச்சனைகளுள்ள ஒரு குடும்பத்தின் பிரச்சனைகளைக் கையாள ஒரு சிறப்புத் தொழில் (professional team) குழுவின் மூலம் சமூகப்பணியாளர்களும் குடும்பச் சிகிச்சையாளர்களும் மேற்கொள்ளும் அணுகுமுறை. இது சிறப்புத் தொழிலினர் அடங்கிய குழு, குடும்பத்திலுள்ள பல்வேறு உறுப்பினர்களுடன் குழுவாகவோ, தனியாகவோ தொடர்பாடி, குறைந்த கால அவகாசத்தில் முனைப்பான அக்கறையுடன் அளிக்கும் சிகிச்சை முறை. இம்முறையில் குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு சேர்க்கைகளோடு (மற்றவருடன் இணைந்தும் தனியாகவும்) நிபுணர்களைத் தனியாகவும் கூட்டாகவும் சந்திப்பார்கள்.

English
A kinship group whose members are seen by the social worker and treated for a variety of different social, economic, and personality difficulties at the same time. Viewing some family clients as "multiproblem" enables the social worker to use many intervention techniques to address more than one problem at a time. See also multiple-impact theory.