multisystems orientation
பன்முகப் பார்வை, பலகோணப் பார்வை, ஒருங்கிணைந்த பார்வை / நோக்குநிலை
தமிழ் விளக்கம்
சமூகப்பணியாளரிடம் உதவிகேட்டு வரும் வாடிக்கையாளர் பலவற்றோடு (மனிதர்கள், அமைப்புகள் அடங்கிய ஒட்டுமொத்த சூழல்) தொடர்பு கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அந்தச் சூழலால் அவர் தாக்கமுறுவதையும், அந்தச் சூழலின் மீது அவர் தாக்கத்தை உண்டாக்குவதையும் உணர்ந்து, அதற்கேற்பத் தீர்வு முறைகளைக் காணும் பன்முகப்பார்வை. இந்தப் பார்வையின் பின்னணியில் வாடிக்கையாளரைக் கையாளும் சமூகப்பணியாளர், தன்னுடைய சிகிச்சை பலனளிக்க, பல்வேறு சிறப்புத் தொழிலினர் (நிபுணர்கள்) மற்றும் நிறுவனங்களின் கூட்டு முயற்சியை நாடுவார். எடுத்துக்காட்டாக, குழந்தைகளிடம் சில்மிஷம் செய்த குற்றத்திற்காக ஒரு குடும்பத் தலைவர் கைது செய்யப்பட்டால், அக்குடும்பக் குழந்தைகளுக்கும், அக்குழந்தைகளின் தாய்க்கும் பொருளாதாரம் மற்றும் உணர்வு ரீதியான உதவிகளையும், கைது செய்யப்பட்ட தந்தைக்கு சட்ட உதவி மற்றும் மனநலச் சேவைகளையும், அக்குடும்பத்தின் விரிவாக உள்ள பிற உறவினர்களோடு குழுப்பணியும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளவேண்டி வரும்.
பார்க்க: intensive family therapy - தீவிர குடும்பப் பரிபாலனச் சேவைகள், குடும்பப் பரிபாலனத்திற்கான முனைப்பான சேவைகள் - பல நேரங்களில் நெருக்கடிக்குள்ளான குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவிகள், அக்குடும்பங்களின் தேவையைப் பொருத்ததாக அமையாமல், உதவி செய்ய முற்படும் நிறுவனங்களின் தன்மையைப் பொருத்தே அமைவதால், குடும்பங்களுக்குத் தேவையான பொருத்தமான உதவிகள் கிடைப்பதில்லை. இதை நிவர்த்திக்கவே தீவிர குடும்பப் பரிபாலன சேவைகள் வடிவமைக்கப்பட்டது. குடும்பங்களை மையப்படுத்திய, சமுதாயம் சார்ந்த, குடும்பத்திலிருந்து குழந்தைகளைப் பிரித்து காப்பகங்களுக்கு அனுப்பாத, குழந்தைகளை வீட்டிலோ அல்லது அக்குடும்பத்திற்கு பரிச்சயமான இடத்திலோ வைத்து, குறுகிய காலத்திற்கு 24 மணிநேரமும் உதவி செய்ய, அதிக வேலைப்பளு இல்லாதபடி சமூகப்பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கும் திட்டம். எடுத்துக்காட்டாக சிறார் நீதிமன்றங்கள் பரிந்துரையின் பேரில் வரும் குடும்பங்களுக்கான தேவைகளும், மனநல மருத்துவமனைகளின் பரிந்துரையின் பேரில் வரும் குடும்பங்களுக்கான தேவைகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆனால் இந்த இருவகைக் குடும்பங்களையும் உள்ளெடுக்கும் (intake) நிறுவனம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், இருவேறு வகைபட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வது நிறுவனத் திறனிற்கு அப்பாற்பட்டதாக அமைந்துவிடும். இது மாதிரியான சந்தர்ப்பங்களில் நெருக்கடிக்குள்ளான குடும்பங்களுக்குத் தேவைப்படும் எல்லா உதவிகளையும் முழுமையாக வழங்க, தங்களுக்கிடையே பரஸ்பரம் ஒத்துழைக்கும் சமூக சேவை நிறுவனங்களைப் பயன்படுத்தி, சமூகப்பணியாளர் குழுவின் மூலம் சேவைகளை ஒருங்கிணைத்து வழங்கப்படும் முறையை, தீவிர குடும்பப் பரிபாலனச் சேவைகள் அல்லது குடும்பப் பரிபாலனத்திற்கான முனைப்பான சேவைகள் எனப்படுகிறது. இதன்படி ஒரு வாடிக்கையாளரை, ஒரு குடும்பத்தை எந்த நிறுவனம் உள்ளெடுத்தாலும், வாடிக்கையாளரின் தேவைகளுக்கேற்ப பல நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் பொருத்தமான சேவைகள் வழங்கப்படும்.

English
In social work interventions, the approach that gives special recognition to the client as part of an interrelated-related system, each of which influences and is influenced by other systems and the client. The intervention occurs at more than one of these systems and often requires a team of workers and a collaboration of agencies to provide the services needed for effectiveness in this orientation. For example, when the client is a family whose father has been arrested for child molestation, the intervention strategy might include economic and emotional support services for the children and mother, legal and mental health services for the father, and group work with the extended family. An example of the multisystems orientation is the intensive family preservation services (IFPS) program.