mumps
அம்மைக்கட்டு நோய், கூகைக்கட்டு, பொன்னுக்கு வீங்கி, தாளம்மை
தமிழ் விளக்கம்
உமிழ் நீர் சுரப்பிகளில் வீக்கத்துடன் உண்டாகும் தீவிரமான தொற்று நோய் தாளம்மை என்று அழைக்கப்படுகிறது, சாதரணமாக இது பொன்னுக்கு வீங்கி என்று அழைக்கப்படுகிறது. பாரா இன்ஃப்ளுயன்ஸா (மம்ப்ஸ்) ஒன்று மற்றும் இரண்டு என்ற எண்ணுள்ள வைரஸ் தொற்றிக் கொள்வதால் இந்த நோய் உருவாகிறது. இந்த வைரஸ், சுரப்பிக் கோளங்களையும், நரம்புத் திசுக்களையும் தாக்கும் திறனுடையது. உலகின் எல்லா நாடுகளிலும் தாளம்மை நோய் ஏற்படுகிறது. சில பாகங்களில் தாளம்மை நிரந்தரத் தொற்று நோயாகவும் உள்ளது. இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு வருவது என்றாலும் முதியவர்களுக்கு அறவே வராது என்று கூற முடியாது. இது இளவேனிற் காலங்களில்தான் பரவுகிறதென்றாலும் மற்ற பருவங்களிலும் இந்த நோய் தோன்றலாம். இந்த நோய்க் கிருமிகள் நோயுள்ள ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வாய், மூக்கு, வழியாக காற்றின் மூலம் பரவுகிறது. நோயுள்ளவர்கள் இருமினாலும் தும்மினாலும் வெளிப்படும் காற்றுத் திவலைகள் மூலம் இந்த நோய்க் கிருமிகள் அடுத்தவரைத் தொற்றிக் கொள்கின்றன. நோய் தொற்றியவுடன் குருதியில் வைரஸ் கிருமிகள் அதிகரிக்கிறது. இதனால் சுரம் உண்டகிறது. இவ்வைரஸ்கள் வாய்ப்புறச் சுரப்பி கோளங்களையும், நரம்பணுத் திசுக்களையும் நாடிச் சென்று தொற்றிக் கொள்கிறது.
நோய்க்குறிகள்: 1. மனித உடலில் நோய் தொற்றிய பிறகு நோய் முதிர்காலமாக 18 முதல் 20 நாள் ஆகும். 2. பெரும்பாலும் தாளம்மை நோயில் தாடையில் உள்ள உமிழ்நீர் சுரப்பி வீக்கமடையும். அதனால் அங்கு உள்ள தோல் பளபளப்பாகத் தோன்றும். 3. தாடை வீக்கம் தான் இந்நோயின் முதல் அறிகுறியாகும். 4. இந்நோய் தோன்றுமுன் லேசான சுரம் மற்றும் நடுக்கம் ஏற்படலாம். காது வலி, முக நரம்பு மற்றும் வாயினை மெல்ல உதவும் தசைகளில் வலி தோன்றலாம். 5. தாளம்மை வீக்கம் இரண்டு மூன்று நாட்களில் வடிந்து விடும். 6. மீண்டும் ஓரிரு நாளில் அடுத்தப் பக்கத்துக் கன்னத்தில் வீக்கம் தோன்றலாம். 7. இதுபோன்ற நிலை ஏழு அல்லது எட்டு நாட்கள் இருக்கும். 8. உணவைப் பார்த்த உடன் உமிழ் நீர் சுரக்கும். வீங்கி இருக்கும் உமிழ்நீர் சுரப்பி சுரக்கும்போது கன்னத்தில் வலி தோன்றுகிறது. 9. வாயை மெல்ல உதவும் நரம்புகளில் வலி இருக்கும். கழுத்தைச் சுற்றி இருக்கும் நிணநீர் கட்டிகள் வீக்க முற்றிருக்கும். வாழ்வில் ஒரு முறை தாளம்மை வந்து விட்டால் பிறகு வாழ்நாள் முழுவதும் அந்நோய் திரும்ப வர வாய்ப்பில்லை. இந்நோயினால் ஏற்படும் சிக்கல்கள்: 1. ஆண் குழந்தைகளுக்கு விதையழற்சி (Orchits) ஏற்படலாம். இதன் காரணமாக வெகு சிலருக்கு விந்தணு உற்பத்தி பிற்காலத்தில் இல்லாமல் போய்விடுகிறது. பெரும்பாலும் ஒரு பக்கத்தில் உள்ள விதையில் மட்டுமே பாதிப்பு ஏற்படும். அரிதாக ஒரு சில ஆண்களுக்கு இரு விதைகளிலும் பாதிப்பு ஏற்பட்டு விந்தணுக்களே உற்பத்தியாகாமல் ஆண் மலடாக ஆகிவிடுகிறார்கள். 2. பெண்களுக்கு சினைப்பையழற்சி (ஒரு பக்கத்தில் மட்டும்) ஏற்படலாம். 3. பெண்களுக்கு கணைய அழற்சியும் ஏற்படலாம்.
மருத்துவம்: 1. நோயாளரைத் தனி அறையில் தனித்துத் தங்க வைக்க வேண்டும். 2. நீர்ம உணவு மட்டுமே கொடுக்க வேண்டும். தங்கச்சங்கிலியை அல்லது பொன் ஆபரணத்தை நோய்வாய்ப்பட்ட சிறுவர் கழுத்தில் போட்டால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கை இருந்ததால் இந்நோய் பொன்னுக்கு வீங்கி என்றழைக்கப்பட்டது. கூகைக்கட்டுக்கு நவீன மருத்துவ வசதிகள் தற்காலத்தில் அறியப்பட்டுள்ளன. ஆயினும் இது ஒரு அம்மை நோயாகப் பார்க்கப்படுகின்ற காரணத்தினாலும் நேரடி மருந்து இன்மையாலும், மக்கள் மரவு வழியான மருத்துவ முறைகளில் அதிகம் அக்கறை காட்டுகின்றனர். செந்சந்தணம் மற்றும் பனங்காயின் சாறு என்பன கன்னப்பகுதியில் பூசப்படுகின்றன. பன்னீர் குடிப்பதற்குக் கொடுக்கப்படுகின்றது. கன்னத்தின் உப்பல் இறங்கியதும் வேப்பிலை இடப்பட்டு சூடாக்கப்பட்ட வெந்நீரில் குளிக்க அனுமதிக்கப்படுகின்றது. நோயாளி தனிமைப் படுத்தப்படுவதுடன் வெளியே செல்ல அனுமதிக்காமை என்பனவும் கடைப்பிடிக்கப்படுகின்றது.

English
A contagious viral disease that results in painful swelling of the salivary glands, especially under the jawbone.