muscle relaxation technique
தசை இளக்க உத்தி, தசையை இளைப்பாற்றும் உத்தி, தசை தளர்த்தி உத்தி
தமிழ் விளக்கம்
மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்க சுயமாகச் செய்துகொள்ளும் பயிற்சி மற்றும் சிகிச்சை முறை. இதைக் குறிப்பிட்ட தசைத் தொகுதிகளின் மீது கவனம் செலுத்தி, அதை இறுக்கிப் பின் தளர்வுறச் செய்வதன் மூலமாக அடையலாம். இதில் பல்வேறுபட்ட அணுகுமுறைகள் இருந்தாலும், அடிப்படைகள் ஒன்றுதான். அமைதியான இடத்தைத் தேர்வு செய்து, அமர்ந்த, நின்ற அல்லது படுத்துக்கொண்டோ, வரிசைக்கிரமமாக தசைத் தொகுதிகளை (கால்கள், கைகள், கழுத்து, வயிறு, முகம்) இறுக்கி, ஒருசில நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து, பின் தளர்வுறச் செய்வது. இதை மற்றச் சிகிச்சை முறைகளுடன் இணைத்தும் செய்யலாம்.
English
A therapeutic and self-help approach to reducing stress and anxiety; it is accomplished when the subject first tightens and then relaxes a set of muscles while concentrating on those muscles. The procedure has many variations but basically consists of sitting in a quiet, private place and then flexing, holding for a few seconds, and relaxing different muscle groups in a predetermined sequence (such as right hand, right forearm, right shoulder, and so on) until all the muscle groups have been relaxed. The technique is also used in conjunction with other therapy approaches, such as systematic desensitization.