muscular dystrophy
திசு இறப்பு, தசை வளப்பக்கேடு, தசை சம்பந்த நோய், தசை வலுவிழப்பு, தசைவளக்கேடு, தசைவளப்பக்கேடு, தசைநார்த் தேய்வு
தமிழ் விளக்கம்
குழந்தைப் பருவத்தில் தொடங்கி சிறுது சிறிதாக எலும்புத் தசைகளை வலுவிலக்கச் செய்யும் நோய். இந் நோய் கண்டவர்கள் தங்களின் வளரிளம் பருவத்திலே சக்கர நாற்காலியில் முடங்க நேரிடும். ஆரம்ப கட்டமாக தசைகள் பலஹீனமடைவது, வாத்து நடை, தசை ஒருங்கிணைப்புப் பிரச்சனைகள், கற்றல் சீர்கேடு மற்றும் மனவளர்ச்சி குன்றுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். இந்நோய்க்கான காரணங்கள் இதுவரை தெளிவாக வரையறுக்கப்படவில்லை. ஆனால் பெரும்பாலான நோயாளிகளுக்கு, இது தாய் வழி மூலம் மரபு ரீதியில் வருவதாக அறியப்பட்டுள்ளது.
English
A progressive disease of the skeletal muscles that usually begins in early childhood. In some forms, patients are confined to wheelchairs by the time they reach adolescence. Early manifestations of the disease include progressive muscular weakness, waddling gait, coordination problems, and sometimes learning disorder and mental retardation. Causes are not well established for all types, but in many male victims it is an inherited disease, passed on through the mother.