music therapy
இசை / சங்கீத சிகிச்சை
தமிழ் விளக்கம்
இசையை ஒரு சாதனமாகப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களுடன் தொடர்பாடவும், அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும், பதட்டத்தைக் குறைக்கவும், தங்கள் உணர்வுகளை உறுதிப்படுத்தவும், நடத்தையை மாற்றவும் செய்யப்படுகின்ற சமூகஉளவியல் அணுகுமுறை. எப்படி ஒவ்வொருவருக்கும் கைரேகை பிரத்யேக அடையாளமாக இருக்கிறதோ, அதே போலவே குரலும் ஒவ்வொருவருக்கும் தனித் தன்மையுடன் பிரத்யேகமாக உள்ளதென்றும், ஒருவரின் குரலைப் பகுத்துப் பார்ப்பதன் மூலம், அவர் உடலாலும் உள்ளத்தாலும் கொண்டுள்ள வியாதிகளைக் கண்டறிந்து, சிகிச்சைக்கு வருவோரின் குரலைப் பகுத்துப் பார்த்து, அவரது நோயைத் தீர்க்கும் ஒலி அலைகளை இயர் போன் மூலம் அவரைக் கேட்கச் செய்து குணப்படுத்துவது வைத்திய முறையாக வளர்ந்துள்ளது. தற்போது இசை மருத்துவச் சிகிச்சையானது மனநலம் சம்பந்தப்பட்டவர்களுக்கே கொடுக்கப்படுகிறது. மனநலக் குறைபாடுகள் இல்லாதவர்களுக்கும் அவர்களின் ஆளுமைத் திறனை மேம்படுத்த இசைச் சிகிச்சை பயன்படுகிறது அமெரிக்கன் மியூசிக் தெராபி அசோசியேஷன் (1971) மற்றும் தேசிய இசைச் சிகிச்சை அமைப்பும் இசைச் சிகிச்சை பற்றிய தகவல் பரிமாற்றத்திற்கும், இசைச் சிகிச்சையாளர்களுக்கு உரிமம் வழங்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. பல்வேறுபட்ட தொழில் சார்ந்தவர்கள், சமூகப்பணியாளர்கள் கூட, இசைச் சிகிச்சையாளர்களாக பயிற்சி பெற்று சேவை செய்கிறார்கள்.
English
Psychosocial intervention that emphasizes the use of music as a means of communicating with clients or helping them express themselves, reduce tension, validate feelings, promote behavioral change, and influence tension. Often used as an adjunct to other forms of therapy, music therapy sometimes gets clients to discuss music and lyrics, play instruments, and write songs. Two organizations, the American Music Therapy Association (AMTA) founded in 1971 and the National Association for Music Therapy founded in 1951, promote the field; facilitate information-building, training, and dissemination of information; and certify qualified music therapists. Music therapists come from many professions, including social work. See also dance therapy.