mutism

பேசாநிலை, மௌனம், ஊமைத்தன்மை

தமிழ் விளக்கம்

இயல்பாகப் பேசும் திறன் படைத்த குழந்தை, சில சூழ்நிலைகளில் பேசாமல் மௌனம் சாதிப்பது. இது ஒருவித தாழ்வு மனப்பான்மையினாலும், பேச அச்சப்படுவதாலும் ஏற்படுவதாக உளவியலாளர்களின் கருத்து. குழந்தைகள் உணர்வு உறைந்த நிலைக்குச் சென்று, பேச இயலாதவர்களாகிறார்கள். தங்களின் மௌனம் கேலிக்குரியதாகிவிடுமென்று தெரிந்திருந்தும், பிறர் தன்னை ஒதுக்கி வைக்க காரணமாயிருந்து விடுமென்று தெரிந்திருந்தும், தண்டனைக்குள்ளாவோம் என்று தெரிந்திருந்தும் அவர்களால் பேசமுடிவதில்லை. இது பெரும்பாலும் அதீத கூச்சத்தினாலும், சூழல் ஏற்படுத்தும் பதட்டத்தாலும் உருவாவது.

English

A refusal or inability to speak.