mutual withdrawal

பரஸ்பரம் ஒதுங்கி இருத்தல், ஒருவருக்கொருவர் விலகி இருத்தல் / பாராமுகமாக இருத்தல்

தமிழ் விளக்கம்

சில நேரங்களில் கருத்து வேறுபாடுகளுக்குள்ளான / பிணக்குகளுள்ள தம்பதியினருக்குள்ளோ அல்லது பிற குடும்ப உறுப்பினர்களுக்குள்ளோ, பிரச்சனையைத் தீர்க்க ஆர்வம் கொள்ளாது ஒருவருக்கொருவர் பாராமுகமாகவும், சலிப்புற்றும், தொடர்புகளற்றும் இருப்பது.

English

The condition of indifference, boredom, noncommunication, and nonmotivation to resolve problems that sometimes occurs among troubled couples and family members.