myocardial infarction

மாரடைப்பு, நெஞ்சு வலி, இதயத் தசை இறப்பு

தமிழ் விளக்கம்

இதயத்தின் அறைகளுக்குள் எந்த நேரமும் இரத்தம் நிறைந்திருக்கிறதென்றாலும் அதனை இயக்கும் தசைநார்களுக்கு அந்த இரத்தம் நேரடியாகக் கிடைப்பதில்லை. இரண்டு சிறிய இரத்தக் குழாய்கள் - கொரனரி நாடிகள் (Coronary arteries) மூலமே கிடைக்கின்றன. இவை முடியுரு நாடிகள் அல்லது முடியுரு தமனிகள் எனப்படுகின்றன. தமனிகளின் சுவர்களில் கொலஸ்டிரால் போன்ற கொழுப்புப் பொருட்களும், வெள்ளைக் குருதி அணுக்களும் சேர்ந்து உட்புறத்தில் படிந்து, தமனியைக் குறுக்கி, இரத்தம் செல்வதைத் தடுக்கும். இவற்றில் ஒன்றில் அல்லது அவற்றின் கிளைகளில் இரத்தம் செல்வது தடைப்பட்டால் அப் பகுதியில் உள்ள இதயத்தின் தசை நார்களுக்கு இரத்தம் போதிய அளவு கிடைக்காது. அந்நிலையில் தசை நார்களுக்குப் போதிய ஆக்சிஜன் கிடைக்காது போய்விடும். அல்லது தசை நார்களுக்கு இரத்த ஓட்டம் அடியோடு தடைப்பட்டு. அப்பகுதியிலுள்ள தசைகள் இறந்துவிடவும் கூடும். இதுவே நெஞ்சுவலியாக வெளிப்படும். இது Myocardial Infarction எனப்படுகிறது. இதை இதயத் தாக்குகை, மாரடைப்பு, மார்பு நெறிப்பு என்றும் சொல்லலாம். ஆனால் மாரடைப்பைத் தவிர வேறு காரணங்களாலும் நெஞ்சுவலி ஏற்படலாம்.

English

A circulatory system disease in which a blood vessel that carries blood to the heart muscles (for example, a coronary artery) becomes blocked as the result of a blood clot or hemorrhage. Often this occurs because the artery wall has become hardened or narrowed by arteriosclerosis. The resulting interruption of blood flow to the heart muscle often results in the death of some tissue in the heart and sometimes in heart failure. See also heart attack.