narcissism

தற்காதல், தன்னழகுப் பெருமை, தற்பூசனை, தற்காதற் கோளாறு, சுய லயிப்பு

தமிழ் விளக்கம்

நாசீசம், நாசீஸ்டிக், மற்றும் நாசீஸ்டி என்னும் சொற்கள் பெரும்பாலும் இழிவுப்படுத்தக் கூடிய சொற்களாகவே பயன்படுத்தப்படுகின்றன, இது வீண் தற்பெருமை, தற்செருக்கு, தன்முனைப்பு அல்லது வெறுமனே சுயநலம் என்பதைக் குறிக்கிறது. ஒரு சமூகக் குழுவுக்கு, இதை அடைமொழியாக்கும் போது, அது சில நேரங்களில் உயர்ந்தோர் குழாம் என்றோ அல்லது மற்றவர்களின் துன்பத்தில் அக்கறையின்மையைக் கொண்ட குழு என்றோ குறிக்கிறது. 'நாசீசிசம்' என்னும் பெயர் கிரேக்கப் புராணக் கதைகளிலிருந்து பெறப்பட்டது. நாசீசிசஸ் ஒரு அழகான கிரேக்க இளைஞன். அவன் தேவதை எக்கோவின் மூர்க்கத்தனமான காதலை நிராகரித்தான். அதற்குத் தண்டனையாக ஒரு தண்ணீர்க் குட்டையில் தோன்றும் அவனுடைய பிம்பத்தையே அவன் காதலிக்கும்படி சபிக்கப்பட்டான். தன்னுடைய காதலை நிறைவேற்றமுடியாத நாசீசிசஸ் நலிவுற்று, நாசீசிசஸ் என்னும் தன்னுடைய பெயரைக் கொண்ட பூவாக மாறிவிடுகிறான் என்பது கதை.
பிறப்பிலிருந்தே சில நாசீசிசம்கள் எல்லோரின் மனதிலும் ஒரு அத்தியாவசிய அங்கமாக இருப்பதாக ஃப்ராய்ட் நம்பினார். பெரியவர்களிடத்தில், போதிய அளவு ஆரோக்கியமான நாசீசிசம், ஒரு தனிநபரின் புலப்பாடுத் தேவைகள், மற்றவர்களுடன் தொடர்புபடுத்திச் சமன்படுத்திப் பார்க்க அனுமதிக்கிறது
மனிதன் காலகாலமாகவே தன்னை “வெளிக்காட்டுவதில்” முனைப்பாக இருந்து வருகின்றான். தற்போது பிரபலமாகிவரும் செல்பி (சுய ஒளிப்படம்) அத் தன்முனைப்புக்கு இலகுவாக வழிசெய்து கொடுக்கிறது. அளவுக்கு அதிகமாக செல்பிக்கு “அடிமையாகிப் போகும்” நிலை ஏற்பட்டால் அது உளநலக் குறைபாடு என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். செல்பி எடுத்துக்கொள்ளும் பலபேரிடம் செய்த ஆய்வின்படி, உடல் உருவக் கோளாறு, தன்னம்பிக்கைக் குறைபாடு, தற்காதல் கோளாறு, சமுதாய பொறுப்புணர்வற்றவர், கையாளல் திறமையின்மை, சுயமறுப்பு ஆகிய உளவிற் குறைபாடு உள்ளவர்கள் தாம் அதிகம் செல்பி எடுக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

English

Excessive self-preoccupation and self-love; an extreme form of egocentrism.