narcissistic personality disorder
தற்காதல் / தன்னழகுப் பெருமை / தற்பூசனை / தற்காதற் கோளாறு / சுய லயிப்பு ஆளுமைக்கோளாறு
தமிழ் விளக்கம்
இது பல ஆரோக்கியமற்ற அறிகுறிகளைக்கொண்ட ஆளுமைக்கோளாறு. தற்காதல் கோளாறுள்ளவர்கள் தங்களுக்குச் சம இணையானவர்களைக் காட்டிலும், தங்களை மேம்பட்டவர்களாக எண்ணும் போக்கு, மிகைப்படுத்தப்பட்ட சுய-கண்ணோட்டங்கள், தங்களைத் தாங்களே தனித் தன்மையுடையவர்களாகவும் சிறப்பான நபர்களாகவும் எண்ணிக்கொள்ளும் மனோபாவம், சுயநலம். கூர்மதி, இக்கட்டான நிலைகளில் பெரும்பாலும் சுயநலத்துடன் நடந்து கொள்ளல் போன்ற அறிகுறிகளைக் கொண்டிருப்பார்கள். தற்காதல் ஆளுமையைப்பற்றி ஆராய்ந்த உளவியலாளர்கள், அவர்களிடம் வெட்கங்கெட்ட தன்மை, வியக்கத்தக்க சிந்தனை, இறுமாப்பு, பொறாமை, தன்னலத் தேட்டம், பகட்டாரவாரப் பாங்கு, மேலெழுந்தவாரியான சிந்தனை, பொய்பேசுதல், மனஉலைவு அல்லது குற்றப் பொறுப்புணர்வு இல்லாமை, மேலீடான பாவனை, இரக்க உணர்வில்லாமை / சுரணையற்றிருத்தல், சொந்த செயல்களுக்குப் பொறுப்பேற்கத் தவறுதல் போன்ற அறிகுறிகள் தென்படுமென்று தெரிவிக்கின்றனர்.
English
One of the personality disorders characterized by excessive egocentrism, grandiosity, self-centeredness, preoccupation with feelings of envy, fragile self-esteem, and behavior that is often seeking approval or admiration. The person usually has little empathy, volatile interpersonal relationships, and periodic depression.