narcotics

போதைப் பொருள்

தமிழ் விளக்கம்

போதைப் பொருள் உபயோகமென்பது போதை தருமென்று அறியப்பட்ட பொருளை, அளவிலும் முறையிலும், தனக்கோ பிறருக்கோ தீங்கு விளைவிக்குமளவு பயன்படுத்துவது. போதைப் பொருள் என்பது பொதுவாக மருத்துவ அல்லது நோய் நீக்கக் காரணமின்றி, உளவெழுச்சியையோ அல்லது செயல்திறனைத் தூண்டவோ உபயோகிக்கப்படும் உள இயக்கி மருந்துகளாகும். போதைப் பொருட்களைப் பொது சுகாதாரம் (public health), ஊடகங்கள் (mass communication and vernacular usage), மருத்துவம் (medical) அரசியல் மற்றும் குற்றவியல் சட்டம் (political and criminal justice) பல கண்ணோட்டங்களில் பலவாறக விளக்கியிருந்தாலும், முறையற்ற உபயோகத்தாலும், விளைவுகளாலும் எல்லா உளஇயக்கி மருந்துகளும் (சிகிச்சைக்கு உபயோகிக்கப்படும் மருந்துகள் கூட) எதிர்மறைப் பொருளிலே அர்த்தம் கொள்ளப்படுகிறது. மது (ஆல்கஹால், ஆம்பீடமைன்ஸ் (amphetamines), பார்பிட்டுரேட், (barbiturates), பெஞ்சோடியாபைன்ஸ் (benzodiazepines (particularly alprazolam, temazepam, diazepam and clonazepam), கோகைன் (cocaine), methaqualone, மற்றும் ஒபியம் (opioids).போன்ற பொருட்கள் இந்த வகையிலடங்கும். போதைப் பழக்கம் அதை உபயோகிப்பவரின் ஆளுமையைச் சிதைத்து குற்றச் செயல்களுக்கும், சமூக விரோதச் செயல்களுக்கும் காரணமாக அமைவதால் பலநாடுகளில் போதைப் பொருட்கள் என்று அறிவிக்கப்பட்ட மருந்துகளை உற்பத்தி செய்வது, உபயோகிப்பது, விநியோகிப்பது தண்டனைக்குறிய குற்றமாக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் ஏறக்குறைய 12 கோடிப்பேர் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

English

Natural or synthetic drugs that have a depressant effect on the central nervous system (CNS), relieve pain and anxiety, and alter mood. The major narcotic is opium (and its constituents codeine and morphine), from which heroin is derived. Narcotics tend to result in addiction, and their side effects can often endanger the life of the user.