narrative summary

வரிசைப்பட செறிவாக எடுத்துரைத்தல், செறிவான நிகழ்முறை அறிக்கை, விரிவான அறிக்கை, விரிவறிக்கை, கதைச்செறிவு, வருணனை, செறிவான எடுத்துரைப்பு

தமிழ் விளக்கம்

சமூகப்பணியாளர் அக்கறை கொண்டுள்ள, பரிந்தாதரித்துச் செயல்படுகிற, தலையிடும் சமூக நிகழ்வைப் பற்றிய தகவல்களை விவரமாக எடுத்துரைக்கும் பதிவு முறை. ஒரு நிகழ்வில் தான் அக்கறை எடுத்துக் கொண்டதற்கான நியாயம், தான் பின்பற்றிய வழிமுறைகள், அதனுடைய விளைவுகள்,, அதைப்பற்றிய முன்கனிப்பு, தன்னுடைய பரிந்துரைகள் போன்ற விவரங்களை சமூகப்பணியாளர் பதிவு செய்யும் முறை. சமூகப்பணியாளர்கள் சமூக நிகழ்வைப் பற்றி பதிவு செய்யும் போது மிகச் செறிவான முறையில், அந்த நிகழ்வின் போக்குகள், தான் தலையிடுவற்கு முன்னரே தான் உணர்ந்து கொண்டது, தன் சார்பாக எடுத்த முயற்சிகள் மற்றும் அதைப்பற்றிய ஒட்டுமொத்த முடிவுகள் போன்றவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.

English

A system of social case recording in which the social worker describes and consolidates all the relevant information obtained about the client system: the progression of the intervention, including procedures used and outcomes, and the interim and concluding prognosis and recommendations. The information is written as succinctly as possible and is based on the social worker's ongoing progress notes, findings before the intervention, and overall conclusion about the case. See also process recording.