NASW Board of Directors
தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனம் இயக்குனர் குழு
தமிழ் விளக்கம்
தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனத்தின் அனைத்து உறுப்பினர்களாலும் (பொதுச்சபை) மூன்றாண்டு காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் 24 உறுப்பினர்கள், இயக்குனர் குழுவென்று அழைக்கப்படுவார்கள். சம்மேளனத்தின் முக்கிய கொள்கைகளை வடிவமைக்கவும், செயல்திட்டங்களை முன்னுரிமைப்படுத்தவும், அதைச் செயல்படுத்தவும், அதற்கான ஆதாரங்களை ஒதுக்கீடு செய்யவும், தேசிய அளவிலான குழுக்கள், பணிக்குழுக்களை நியமனம் செய்யவும், உறுப்பினர்களின் தகுதிகள் மற்றும் சேர்க்கை பற்றிய செலுத்து நெறிகளைத் தீர்மானிக்கவும், பணியாளர்கள் சம்பந்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் நடத்தை நெறிகளை பரிந்துரைப்பதும், நிர்வாக இயக்குனரின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வது போன்ற காரியங்களை பொதுக்குழு வகுத்த விதிமுறைகளின்படி செய்ய அதிகாரம் படைத்தவர்கள். இந்த இயக்குனர் குழு, தலைவரால் வழிநடத்தப்படும்.
English
The National Association of Social Workers (NASW) 24-member body elected by the membership for three-year terms (elected officers serve two-year terms). Its major functions are to determine ongoing policies and priorities, implement policies, allocate resources under the guidelines established by the Delegate Assembly, establish national committees and task forces to carry out programs, determine membership policies and practices, set personnel policies and practices, and evaluate the executive director. The board is chaired by the president, who is elected for a two-year term following a year as president-elect.