Nation of Islam

இஸ்லாம் தேசம்

தமிழ் விளக்கம்

இஸ்லாம் தேசம் (Nation of Islam) என்பது ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க சமய மற்றும் பண்பாட்டு அமைப்பு ஆகும். இவ்வமைப்பு வாலஸ் ஃபரத் முகமது என்பவரால் 1930 ல் தோற்றுவிக்கப்பட்டது. 1934ல் ஃபரத் முகமது காணாமல் போய்விட, இவரின் முக்கிய சீடர் எலைஜா முகமது, இந்த அமைப்பை வளர்த்தெடுத்தார். புகழ்பெற்ற பேச்சாளர் மால்கம் எக்ஸ் இந்த அமைப்பில் சேர்ந்ததால் 1950 - 1960 காலகட்டத்தில் அமெரிக்காவின் சமூக உரிமை இயக்கத்தில் இந்த அமைப்பிற்குச் செல்வாக்கு வளர்ந்தது. ஆனால் மால்கம் எக்ஸ் 1965 ல் கொலையுண்ட பின்பு, இஸ்லாம் தேசம் பிரிய ஆரம்பித்தது. 1975 இல் எலைஜா முகமது காலமானார். இவரின் மகன், இமாம் வாரித் தீன் முகமது இஸ்லாம் தேசத்தை, சன்னி இஸ்லாம் இயக்கமாக்க முனைந்தார். இதனால் 1978 இல் இஸ்லாம் தேசம் இரண்டாகப் பிரிந்தது. வாரித் தீன் முகமது ஒரு பிரிவிற்குத் தலைவராகி இஸ்லாம் தேசத்தை 'முஸ்லிம் அமெரிக்க சங்கம்' என்று மாற்றினார். இரண்டாம் பிரிவிற்கு லூயிஸ் ஃபரக்கான் என்பவர் தலைவராகி இஸ்லாம் தேசம் என்ற பெயரிலே அமைப்பைத் தொடர்ந்து நடத்தினார். இன்றளவும் இந்த இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. இந்த அமைப்பை விமர்சிப்பவர்கள், இது ஒரு கறுப்பு மேலாத்திக்க, யூதத் துவேச எண்ணமுடைய நிறுவனம் என்று சொல்கிறார்கள்.

English

The religious (Moslem) organization founded in 1930 to emphasize self-help among African Americans, once referred to as Black Muslims. The Nation of Islam sponsors many activities and programs to provide social services to the community.