National Abortion Rights Action League (NARAL)
கருக்கலைப்பு உரிமைச் செயல்பாட்டிற்கான தேசியக் கூட்டிணைவு
தமிழ் விளக்கம்
நார்ல் (NARAL - National Abortion Rights Action League) என்றழைக்கப்படும் கருக்கலைப்பு உரிமைச் செயல்பாட்டிற்கான தேசியக் கூட்டிணைவு, விருப்புரிமைக்கான ஆதரவு (Pro Choice) இயக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இது கருக்கலைப்பு உரிமைகளுக்காகவும், கருக்கலைப்பு வசதிகள் பரவலாக்கப்பட வேண்டுமென்பதற்காகவும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தேசம் தழுவிய இயக்கம். 1969 இல் கருக்கலைப்பு சட்டங்களை ரத்து செய்யக்கோரிய தேசியக் கூட்டமைப்பாக உருவாகி, பின்னர் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பிற்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய பின்னர், அந்த உரிமையைப் பாதுகாக்கவும், விரிவுபடுத்தவுமான நார்ல் அமைப்பாக பெயர் மாறியது. தற்போது கருக்கலைப்பு மற்றும் இனப்பெருக்க உரிமைகளுக்கான கூட்டிணைவாக (National Abortion and Reproductive Rights Action League) பெயர்மாற்றம் பெற்றுள்ளது.
English
The organization founded in 1969 to protect and maintain the right to legal abortion. The organization was formed as the National Association for Repeal of Abortion Laws and took its present name after the 1973 Supreme Court decision to permit legal abortions. See also Roe v. Wade and the National Right-to-Life Committee (NRLC).