National Alliance for the Mentally Ill

மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான தேசியக் கூட்டணி

தமிழ் விளக்கம்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் குடும்பத்தினர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு செயல்படும் தேசம் தழுவிய அமைப்பு. மனநலப் பாதிப்பை மற்ற உடல்நலப் பாதிப்பு போன்றே கருதவேண்டும், மற்ற சிகிச்சைகளுக்குக் காப்பீடு வசதி உள்ளதுபோல மனநலப் பாதிப்பிற்கும் காப்பீடு வழங்கப்படவேண்டுமென்ற கோரிக்கையும், மனநோயாளிகளுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆதரவும், உளவளச் சிகிச்சை மற்றும் மனநலம், மன நோய்கள் பற்றிய ஆய்வும், மன நோயாளிகள் மீதான இளிவெண்ணம் போக்கவும் இந்த நிறுவனம் தேசிய அளவில் பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்கிறது. மன நோயானது நரம்பு ரீதியான பிரச்சனைகளாலும், மூளை பாதிப்படைவதாலும் ஏற்படுகிறது என்ற அறிவியல் கண்ணோட்டத்தை மக்கள் மனதில் படிய வைக்க முனைகிறது. இந்நிறுவனம் மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட தங்களுடைய பிள்ளைகளின் சிகிச்சையின் போது எதிர்கொண்ட சிரமங்களையும், இளிவான பேச்சுக்களாலும் பாதிப்படைந்த, ஹரியத் ஷெல்டர் மற்றும் பெவர்லி யங்க் (Harriet Shetler & Beverly Young) என்ற இரு தாய்மார்களால் 1979 ஆம் ஆண்டு வர்ஜீனியா மாநிலம் ஆர்லிங்க்டன் நகரில் தோற்றுவிக்கப்பட்டு, தற்போது 2 இலட்சத்திற்கு மேலான உறுப்பினர்களுடனும், ஆயிரத்திற்கும் அதிகமான கிளை மற்றும் துணை அமைப்புகளுடனும் செயல்பட்டு வருகிறது.

English

See NAMI.