National Association for the Advancement of Colored People (NAACP)

கறுப்பின மக்கள் முன்னேற்றத்திற்கான தேசியக் கூட்டமைப்பு

தமிழ் விளக்கம்

இது அமெரிக்காவின் பழமையானதும், பெரியதுமானதுமான, 1909 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்ட்ட மக்கள் உரிமைக்கழகம். இது கறுப்பின மக்கள் விசாரணையின்றி மரணதண்டனைக்கு உள்ளானதாலும், அவர்கள் மீதான வழக்குகளில் தான்தோன்றித் தனமான தீர்ப்புகள் வழங்கப்பட்டதாலும் அதிருப்தியடைந்த மேரி வொய்ட் ஓவிங்க்டன் என்ற சமூகப்பணியாளராலும், பிற கறுப்பின மற்றும் வெள்ளையர்களின் ஆதரவாலும் தோற்றுவிக்கப்பட்டது. அமெரிக்காவின் எல்லா மாநிலங்களிலும் செயல்படுகின்ற, 1500 கிளைகளுக்கு மேல் கொண்டுள்ள, இந்தக் கூட்டமைப்பு, கறுப்பின மக்களின் உரிமைகளைச் சட்டபூர்வமாக வென்றெடுக்கவும், அரசியல் செயல்பாடுகள் மூலம் எல்லோருக்குமான மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், மனித உரிமைகள் பற்றிய தகவல்கள் தந்துதவுவதிலும், உரிமைகள் பற்றிய கல்வி கொடுப்பதிலும் முனைப்புடன் செயல்படுகிறது.

English

The largest and oldest of the U.S. civil rights organizations. It was established in 1909 when social worker Mary White Ovington (1865-1951) and others helped organize African Americans and white people who were outraged about a series of lynchings. NAACP now has more than 1,500 local chapters throughout all 50 states and works to achieve its goals primarily through legal actions to protect the rights of black citizens, nonpartisan political action to enact civil rights laws, and education and public information.