National Association of Black Social Workers (NABSW)
கறுப்பின சமூகப்பணியாளர்களின் தேசிய அமைப்பு
தமிழ் விளக்கம்
கறுப்பின சமூகப்பணியாளர்களையும், கறுப்பின மக்களின் மேம்பாட்டிலும் ஆர்வமுள்ள பிற சமூகப்பணியாளர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு, 1968 ஆம் ஆரம்பிக்கப்பட்ட தொழில்முறைசார் அமைப்பு. இது பல நிலைகளில் கறுப்பின மக்கள் எதிர்கொள்ளும் பிரத்யேகப் பிரச்சனைகளைக் கையாளவும், அவர்களுக்கான நலத்திட்டங்களையும், உரிமைகளையும் முன்னெடுக்கவும், கறுப்பின சமூகப்பணியாளர்களுக்குத் தொழில் ரீதியான வழிகாட்டுதல்களைக் கொடுக்கவுமான நோக்கங்களைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு வருடாந்திர கருத்தரங்குகள், ஆய்வு, கல்விப்பணிகள் மற்றும் வெளியீடுகள் போன்ற செயல்களின் மூலம் இயங்குகிறது. கருப்பினக்குழு (Black Caucus) என்ற பத்திரிகையும் நடத்துகிறது.
English
The professional association formed in 1968, comprising black social workers and other social workers who are interested in the goals of the organization. These goals are to deal with problems pertinent to the black community on all levels, including working with clients, promoting programs serving African Americans, and assisting black social workers. NABSW holds annual conventions, performs research and educational functions, and publishes the journal Black Caucus.