National Association of County Human Services Administrators (NACHS)
மாவட்ட மனித சேவைத்துறை நிர்வாகிகளுக்கான தேசியச் சங்கம்
தமிழ் விளக்கம்
1935 ஆம் ஆண்டு மாவட்ட சமூகநல இயக்குனர்களுக்கான தேசியச் சங்கம் என்ற பெயரில் துவக்கப்பட்டு, 1981 ஆம் ஆண்டு முதல் மாவட்ட அளவில் செயல்படும் பொதுநலத்துறை மற்றும் மனித சேவை நிர்வாகிகளுக்கான தேசியச் சங்கம் என்ற பெயரில் செயல்படுகிறது. தொழில் முறை அமைப்பான இச்சங்கம், சமூக நலத்தைப் பற்றிய ஆய்வுகளை ஊக்குவிப்பதையும், ஒவ்வொரு வட்டாரத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும், அதன் தீர்வுகள் பற்றியும் பகிர்ந்துகொள்ளவதையும், பயனுள்ள சமூகநலக் கொள்கைகள் பற்றி பரிந்துரைப்பதையும், மனித சேவைப்பணிகளை ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
English
The professional organization of administrators of county public welfare and human services offices to facilitate and coordinate research, advocate for effective policies, and exchange information about mutual problems and their solutions. NACHS was founded in 1935 as the National Association of County Welfare Directors and took its present name in 1981.