National Association of School Social Workers (NASSW)

பள்ளி சமூகபணியாளர்களுக்கான தேசியச் சங்கம்

தமிழ் விளக்கம்

ஆரம்ப, நடுநிலை, உயர்நிலைபள்ளிகளில் பணியாற்றும் சமூகப்பணியாளர்களுக்கான இந்த தேசிய அமைப்பு. 1919 இல் வருகைதரு ஆசிரியர்கள் சங்கமாக ஆரம்பிக்கப்பட்டு, பின் பெயர் மாற்றம் பெற்றது. 1955 ஆம் ஆண்டு சமூகப்பணித் தொடர்புடைய ஏழுசங்கங்கள் ஒன்றிணைந்து தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனமாக (National Association of Social Workers (NASW)) உருவாகியபோது, பள்ளி சமூகப்பணியாளர் சங்கமும் அதனுடன் இணைந்தது.
இணைந்த ஏழு சங்கங்கள் (1.அமெரிக்க சமூகப்பணியாளர்கள் சங்கம் 2.அமெரிக்க உளப்பிணி சமூகப்பணியாளர்கள் சங்கம் 3.அமெரிக்க குழுப்பணியாளர்கள் சங்கம், 4.சமுதாய அமைப்பிற்கான கல்விச் சங்கம் 5.அமெரிக்க மருத்துவ சமூகப்பணியாளர்கள் சங்கம் 6. தேசிய பள்ளி சமூகப்பணியாளர்களுக்கான சங்கம் 7.சமூகப்பணி ஆய்விற்கான குழு).

English

The professional association composed of social workers in elementary, middle, and high schools. The organization was founded in 1919 as the National Association of Visiting Teachers. In 1955 NASSW merged with six other associations to become the National Association of Social Workers (NASW).