National Association of Social Workers (NASW)

தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனம்

தமிழ் விளக்கம்

1955 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தச் சம்மேளனம், சமூகப்பணி தொடர்புடைய ஏழு முக்கிய தேசிய அமைப்புகளின் கூட்டிணைவாகும். அப்போது இணைந்த ஏழு சங்கங்களாவன 1. அமெரிக்க சமூகப்பணியாளர்கள் சங்கம் (American Association of Social Workers (AASW), 2. அமெரிக்க உளப்பிணி சமூகப்பணியாளர்கள் சங்கம் (American Association of Psychiatric Social Workers (AAPSW), 3. அமெரிக்க குழுப்பணியாளர்கள் சங்கம் (American Association of Group Workers (AA GW), 4. சமுதாய அமைப்பிற்கான கல்விச் சங்கம் (Association for the Study of Community Organization (ASCO), 5. அமெரிக்க மருத்துவ சமூகப்பணியாளர்கள் சங்கம் (American Association of Medical Social Workers (AAMSW), 6. தேசியப் பள்ளி சமூகப்பணியாளர்களுக்கான சங்கம் (National Association of School Social Workers (NASSW), 7. சமூகப்பணி ஆய்விற்கான குழு (Social Work Research Group (SWRG).
சமூகப்பணியாளர்களின் (உறுப்பினர்களின்) தொழில்சார்ந்த மேம்பாட்டை ஊக்குவிப்பதும், தொழில் சார்ந்த தரத்தை நிர்ணயித்து அதை நிலைநிறுத்துவதும், பயனுள்ள சமூகநலக் கொள்கைகளை முன்னெடுப்பதும், உறுப்பினர்களின் தொழிசார் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிப்பதும், சமூகப்பணியாளர்களின் தொழில் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவதும் இந்த சம்மேளனத்தின் முக்கிய நோக்கங்கள். சமூகப்பணியாளர் பின்பற்றி ஒழுக வேண்டிய தொழில் நெறிகளை உருவாக்கி, அதைப் பின்பற்ற வைப்பதுடன், பொது மற்றும் சிறப்பு சமூகப்பணிக்கான தரங்களை இச்சம்மேளனமே நிர்ணயித்து வழிநடத்துகிறது. இந்த சம்மேளனத்தின் துணை அமைப்புகள் சமூகப்பணியாளர்களுக்கான சான்றழிப்புக் கழகம் (Academy of Certified Social Workers (ACSW), மருத்துவ சமூகப்பணியாளர்களின் சான்றுப்பதிவேடு, (NASW Register of Clinical Social Workers), நோய்சார்ந்த சமூகப்பணியாளர்களுக்கான பட்டயம் (Diplomate in Clinical Social Work (DCSW), (அமெரிக்கத் தேர்தலுக்கான) வேட்பாளர் தேர்வு செய்வதற்கான அரசியல் செயல்பாடு (Political Action for Candidate Election (PACE), சட்டச் செயல்பாட்டிற்கான கல்விக் கூட்டமைப்பு (Educational Legislative Action Network (ELAN), போன்ற செயல்பாடுகளின் மூலம் சமூகப்பணியாளர்களின் பணித்தரத்தைப் பேணவும், சமூகப்பணியாளர்களின் அரசியல் முக்கியத்துவத்தை உணரவைப்பதற்குமான வழிமுறைகளாகக் கையாளப்படுகிறது. இச் சம்மேளனம் தொழில்ரீதியான கருத்தரங்குகள், தொடர்கல்வி பயிற்சிகள் போன்றவற்றைத் தொடர்ந்து நடத்துவதோடு, சமூகப்பணி சம்பந்தமான வரலாறு, கலைக்களஞ்சியம், அகராதி, புத்தகங்கள், பத்திரிகைகள் போன்றவற்றைத் தொடர்ந்து வெளியிடுகிறது.

English

The organization of social workers established in 1955 through the consolidation of the American Association of Social Workers (AASW), the American Association of Psychiatric Social Workers (AAPSW), the American Association of Group Workers (AA GW), the Association for the Study of Community Organization (ASCO), the American Association of Medical Social Workers (AAMSW), the National Association of School Social Workers (NASSW), and the Social Work Research Group (SWRG). NASW's primary functions include promoting the professional development of its members, establishing and maintaining professional standards of practice, advancing sound social policies, and providing other services that protect its members and enhance their professional status. The organization has developed and adopted the NASW Code of Ethics and other generic and specialized practice standards. Certification and quality assurance are promoted through the Academy of Certified Social Workers (ACSW), the NASW Register of Clinical Social Workers, and the Diplomate in Clinical Social Work (DCSW). Among NASW's political action programs are Political Action for Candidate Election (PACE) and Educational Legislative Action Network (ELAN). NASW also sponsors professional conferences and continuing education programs and produces journals, books, and major reference works such as The Encyclopedia of Social Work and this dictionary. See also National Center on Social Work Policy and Practice.