National Center for Missing and Exploited Children (NCMEC)
காணாமல் போன மற்றும் சுரண்டப்படும் குழந்தைகளுக்கான தேசிய மையம்
தமிழ் விளக்கம்
குழந்தைகள் பலாத்காரமாகத் தூக்கிச் செல்லப்படுதல், நீதிமன்றப் பராபரிப்பு விதிகளை மீறிப் பெற்றோர்களால் எடுத்துச் செல்லப்படுதல், குழந்தைகளை வழிப்பறி செய்தல், குழந்தைகள் காணாமல் போதல், துன்புறுத்தலுக்கு உள்ளான குழந்தைகள் என்று குழந்தைகள் தொடர்புடைய தகவல்களையும், தீர்வுகளையும் தந்துதவும் மையம். இந்த மையத்தின் செயல்பாட்டிற்கான நிதி உதவி, அமெரிக்காவின் நீதித் துறையால் நிர்வகிக்கப்படும், சிறார் நீதி மற்றும் குற்றத் தடுப்பு அலுவலகத்தின் மூலமாகச் செய்யப்படுகிறது. இந்த மையத்தை கட்டணமில்லா அவசர காலத்திற்கான தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது இணையத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.
English
A national clearinghouse and resource center to provide assistance in cases of child abduction, parental kidnapping, child snatching, lost children, and victims of child abuse. Funding comes primarily from the Office of Juvenile Justice and Delinquency Prevention of the U.S. Department of Justice. The center may be reached by calling 1-800-THE LOST or 1-800-843-5678 or online at www.missingkids.org. See also child find organizations.