National Center on Social Work Policy and Practice

சமூகப்பணிக் கொள்கை மற்றும் செயல்முறைகளுக்கான தேசிய மையம்

தமிழ் விளக்கம்

சமூகப்பணியாளர்களின் நேரடியான கள அனுபவங்களின் மூலம் அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் சமூகநலத் தேவைகளைப் பற்றி தகவல்களைச் சேகரித்து, தொகுத்து, பகுப்பாய்வு செய்து, அதையொட்டி புரிந்துகொள்ளப்பட்ட தெளிவை வெவ்வேறு நிலைகளில் சட்டமியற்றுபவர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்கு எடுத்துச் சென்று, அமெரிக்க சமூகத்தின் சமூகப் பிரச்சனைகள் பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும் பரந்துபட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த, 1986 ஆம் ஆண்டு தேசியச் சமூகப்பணியாளர் சம்மேளனத்தால் உருவாக்கப்பட்ட மையம். இந்த மையத்தின் செயல்பாடுகளின் மூலம், சமூகப்பணிக் கல்வி மற்றும் பயிற்சி செழுமையடையவும், சம்மேளனம் வழிவகுக்கின்றது. சாதாரணத் துணை அமைப்பாக செயல்பட்டு வந்த இந்த மையம், 1993 ஆம் ஆண்டிலிருந்து சம்மேளனத்தின் முக்கிய அமைப்பாகவும், திட்டமாகவும் மாறியது.

English

The social work organization established by the National Association of Social Workers (NASW) in 1986 to collect, analyze, and disseminate information about U.S. health and social welfare needs. These data come from the direct experiences of social work practitioners and after analysis are used to inform legislators and the public about social problems and proposed solutions. The information also is used to enhance social work practice effectiveness. In 1993, the center was changed from a subsidiary organization to a formal NASW program.