National Congress of American Indians (NCAI)

அமெரிக்க இந்தியர்களுக்கான தேசியப் பேரவை

தமிழ் விளக்கம்

அமெரிக்காவின் அதிக எண்ணிக்கையுள்ள பூர்வீகக் குடிகளின் மனித உரிமைகளை முன்னெடுக்க அமெரிக்க இந்தியத் தலைவர்களால் 1944 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு, வாஷிங்டன் DC யைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தேசிய அமைப்பு. அமெரிக்க இந்தியர்களின் சமூக, பொருளாதார, கல்வி மற்றும் மனித உரிமைகள் மேம்பாட்டிற்காக செயல்படுதலும், அமெரிக்க இந்தியக் குடிகளுக்கான அரசுக் கொள்கைகளை மதிப்பீடு செய்து அதில் தேவையான மாற்றங்களை வலியுறுத்தலும் இந்தப் பேரவையின் முக்கிய நோக்கங்கள்.

English

The civil rights and lobbying organization established in 1944 by leaders of the nation's largest tribes. With headquarters in Washington, DC, the congress evaluates government policies pertaining to American Indians and promotes programs to enhance economic, educational, and legal rights for its constituents.