National Consumers League (NCL)

தேசிய நுகர்வோர் சம்மேளனம்

தமிழ் விளக்கம்

பொருளுற்பத்தியாளர்கள், விற்பவர்கள், வாங்குபவர்கள், உபயோகிப்பாளர் போன்ற அனைத்து தர்ப்பினருக்கும், சேவைகளை வழங்குவதற்கும், மற்றும் நுகர்வோருக்காக பரிந்துபேசி வாதிடவும், உரிய விழிப்புணர்வு அளிக்கவும், 1899 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. இதை சமூகப்பணியாளரும், வழக்கறிஞருமான புளோரன்ஸ் கெல்லி (1859-1932) மற்றும் கொடையாளர் ஜோசபின் ஷா லோவல் (1843-1904) (Florence Kelley (1859-1932) & Josephine Shaw Lowell (1843-1904) ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு வேலை நிலைமைகளில் மேம்பாடு காணவும், குழந்தைத் தொழிலாளர் சம்பந்தமான சட்டங்கள் கொண்டுவரவும், குறைந்த பட்சக்கூலி மற்றும் வேலைநேரக் குறைப்பு, பணியிடப் பாதுகாப்பு மற்றும் தரமான நுகர்வோர் பொருட்கள் சந்தைப்படுத்தல் போன்ற பல்வேறு நோக்கங்களைக் கொண்டு செயல்படுகிறது.

English

The advocacy and educational organization founded in 1899 to protect those who make, sell, purchase, or use products or provide and use services. In its early years, it was led by social worker-lawyer Florence Kelley (1859-1932) and philanthropist Josephine Shaw Lowell (1843-1904) and successfully fought for improved working conditions, child labor laws, a minimum wage, shorter working hours, and safe and effective consumer products.