National Council on Aging (NCA)

முதுமைக்கான தேசியப் பேரவை

தமிழ் விளக்கம்

முதியோர்களுக்கு உதவி / சேவை செய்யும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கிய ஸ்தாபனம். இந்தப் பேரவை முதியோர் நலனுக்கான செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, முதுமைக்குத் தொடர்புடைய தகவல்களை நிறுவனங்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் முதியவர்களுக்கு சேவை அளிப்பவர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முதியவர்கள் நலனில் அக்கறை கொண்ட அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இது தன்னுடைய, முதுமை, பணி மற்றும் ஓய்வுக்கான தேசிய நிறுவனத்தின் மூலம், நடுத்தர வயதினருக்கும், முதியோர்களுக்கும் பொருத்தமான வேலை வாய்ப்புகளைப் பரிந்துரைத்தும், பணி ஓய்வு சம்பந்தமாக ஆலோசனைகள் கூறியும் வழிநடத்துகிறது.

English

A national organization of individuals and agencies that provide services for older people. The council coordinates conferences and procedures for exchanging information between organizations and helps disseminate information to researchers, academicians, health care providers, family members of older people, and others interested in services to older people. Through its National Institute on Aging, Work, and Retirement (NIAWR), it strives to promote opportunities for middle-age or older people to obtain employment or prepare for retirement.