National Crime Victimization Survey (NCVS)
குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டோரைப் பற்றிய தேசியக் கணக்கெடுப்பு
தமிழ் விளக்கம்
இது அமெரிக்க அரசின் நீதித் துறையால், ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் நடக்கும் குற்றச் செயல்களைப் பற்றியும், அதன் தன்மைகள் பற்றியும் வெளியிடப்படும் ஆண்டறிக்கை. இது காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டு, அதைத் தொகுத்து வெளியிடும் மையப் புலனாய்வுத் துறை (Federal Bureau of Investigation's (FBI's) வெளியிடும் அறிக்கைகள் போலல்லாது, 12 வயதைக் கடந்த அமெரிக்கர்களிடம், காவல் துறையினரால் பதிவு செய்யப்படாத, அவர்களால் குற்றமென்று கருதப்பட்ட நிகழ்வுகளை பல அடுக்கு மாதிரி புள்ளிவிவரக் கணக்கெடுப்பின்படி (stratified random sample) எடுக்கப்பட்ட பேட்டிகளின் மூலம் திரட்டப்படும் தகவல்களைக் கொண்டது. இந்த தேசியக் கணக்கெடுப்பின் மூலம் 50 சதவீத வன்முறைக் குற்றங்களும் 60 சதவீத பிற குற்றங்களும் காவல் துறையினரிடம் புகார் செய்யப்படுவதில்லை என்று தெரிய வருகிறது.
English
An annual report of the U.S. Department of Justice that reports on the numbers and types of crimes committed in the United States. Unlike the Federal Bureau of Investigation's (FBI's) Uniform Crime Reports, which delineate only crimes actually reported to police, the NCVS obtains its data by interviewing a stratified random sample of individuals older than 12. This provides a picture of crime that goes unreported. NCVS has estimated that 50 percent of violent crimes and 60 percent of all crimes are not reported to the police.