National Education Association (NEA)
தேசியக் கல்விக்கழகம்
தமிழ் விளக்கம்
கல்வி முறைகளை மேம்படுத்தவும், கல்வி நிலையங்களில் வசதிகளையும் தரத்தையும் உயர்த்தவும், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, 1857 ஆம் ஆண்டு ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள், கல்வித்துறையிலிருந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தொழில் முறை சார் தேசிய அமைப்பு. இந்த அமைப்பும், அமெரிக்க ஆசிரியர்கள் கூட்டமைப்பும், 1998 ஆம் ஆண்டிலிருந்து தங்களுடைய செயல்பாடுகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்துகிறது.
English
A professional membership association of teachers, school administrators, and related personnel. Founded in 1857, its ma- jor objectives are improved educational practices, facilities, standards, and conditions for teachers and students. In 1998 the NEA and the American Federation of Teachers (AFT) began to merge many of their functions.