national health service

தேசியச் சுகாதார சேவை

தமிழ் விளக்கம்

அரசே நேரடியாகத் தன்னுடைய மக்களுக்காக மருத்துவர்கள் மற்றும் பிற வசதிகளை ஏற்படுத்தி முழுமையான சுகாதார / ஆரோக்கியப் பராமரிப்புப் பணிகளைச் செய்து தருவது. இதைப் பொது மருத்துவ சேவை அல்லது சமூகமயமாக்கப்பட்ட மருத்துவ சேவை என்றும் சொல்லலாம். ஒருவகையில் இது இலவச மருத்துவ சேவை. அமெரிக்காவில் இந்த மாதிரியான சேவைகள் இல்லையென்றாலும், இராணுவத்தில் சேவை செய்தவர்கள், ஆய்தப்படை வீரர்கள் மற்றும் அவரின் குடும்பத்தினர் போன்றவர்களுக்கும், காச நோயாளிகளுக்கும், அமெரிக்க இந்தியர்களுக்கும் இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. இதை தேசிய ஆரோக்கியக் காப்பீட்டுத் திட்டத்தோடு குழப்பிக் கொள்ளக்கூடாது.

English

Direct government provision of medical personnel and facilities for citizens to receive complete health care; also known as "socialized medicine." This system is common in many countries, although not in the United States. However, a form of national health service is provided to certain groups in the United States, including needy veterans, members of the armed forces and their families, tuberculosis patients, and American Indians. This system is not to be confused with national health insurance.