National Incidence-Based Reporting System (NIBRS)
(குற்ற) நிகழ்வுகளை அறிக்கையிடும் தேசிய அமைப்பு
தமிழ் விளக்கம்
தன்னுடைய ஒரே சீரான குற்ற அறிக்கைகளை மேம்படுத்த, அமெரிக்க மத்தியப் புலனாய்வு துறையால் (Federal Bureau of Investigation (FBI), 1986 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட, தகவல் சேகரிப்பு மற்றும் அறிக்கையிடும் நடைமுறை. ஒரே சீரான குற்ற அறிக்கைகளில் பயன்பட்ட 8 வகையான குற்றங்களுக்குப் பதிலாக, 14 வகையான குற்றங்கள் சேர்க்கப்பட்டன. NIBRS இல் போதை மருந்து உபயோகம், ஆயுதங்கள் கொண்டு குற்றமிழைத்தல், கள்ளநோட்டு, மோசடித்தனம் மற்றும் பிற தீவிரம் குறைந்த குற்றங்கள் சேர்க்கப்பட்டன. NIBRS இல் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய தகவல்கள், குற்றத்தால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் உடமை இழப்பு, மீட்கப்பட்ட உடமைகள், ஒரே குற்றத்தில் உள்ளடங்கிய பல குற்றச் செயல்கள் பற்றிய தகவல்களும் இணைக்கப்பட்டன. ஒரே சீரான குற்ற அறிக்கையில் கையாளப்பட்டது போன்றே எல்லாத் தகவல்களும் சட்ட ஒழுங்கு அமலாக்கத் துறையினரிடமிருந்தே (காவல் துறை) பெறப்பட்டன.
English
A data-gathering and reporting procedure developed in 1986 by the Federal Bureau of Investigation (FBI) to revise and modernize its Uniform Crime Reports (UCR). NIBRS has added 14 crime categories to the eight in the UCR, including drug violations, weapons offenses, counterfeiting, and other less serious crimes. NIBRS also includes information about the victims, the amount and type of property lost, information about recovery, and multiple crimes within an incident. As in the UCR, information is obtained from local law enforcement agencies. See also National Crime Victimization Survey (NCVS).