National Institutes of Health (NIH)

சுகாதாரத்திற்கான தேசியக் கழகம்

தமிழ் விளக்கம்

அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மனித சேவைத் துறையின் கீழ் செயல்படும் தேசிய சுகாதாரக் கழகம், நோய் பிறப்பியல், நோய்த்தடுப்பு, சிகிச்சை மற்றும் குணமாக்கல் தொடர்பான ஆய்வுகள் மற்றும் பிற செயல்பாடுகளை ஒருங்கிணைக்கின்றது. ஒவ்வொரு நோய்க்கும் மற்றும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஆரோக்கிய விசயங்களுக்கென்று தனித்தனியாக துணை அமைப்புகளை ஏற்படுத்திக் சிறப்புக் கவனம் செலுத்துகிறது. 1.தேசியப் புற்றுநோய்க் கழகம் (National Cancer Institute), 2. குழந்தை நலன் மற்றும் மனித வளர்ச்சிக்கான கழகம் (National Institute of Child Health and Human Development), 3. மன நலத்திற்கான தேசியக் கழகம் (National Institute of Mental Health (NIMH), 4. ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசியக் கழகம் (National Institute of Allergy and Infectious Diseases), 5. இதயம், நுரையீரல் மற்றும் இரத்தத் தொடர்புடைய பிரச்சனைகளுக்கான தேசியக் கழகம் (National Heart, Lung, and Blood Institute), 6. கீழ்வாதம், தசைக்கூட்டு மற்றும் தோல் நோய்களுக்கான தேசியக் கழகம் (National Institute of Arthritis and Musculoskeletal and Skin Diseases), 7. சர்க்கரை நோய், ஜீரணக் கோளாறுகள் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான தேசியக் கழகம் (National Institute of Diabetes and Digestive and Kidney Diseases), 8. சுற்றுச் சூழல் சுகாதாரத்திற்கான தேசியக் கழகம் (National Institute of Environmental Health Sciences), 9. மது மற்றும் மது துஷ்பிரயோகத்திற்கான தேசியக் கழகம் (National Institute of Alcohol Abuse and Alcoholism), 10. மருந்து துஷ்பிரயோக ஆய்விற்கான தேசியக் கழகம் (National Institute on Drug Abuse (NIDA), 11. தேசியக் கண் நிறுவனம் (National Eye Institute), 12. முதுமைக்கான தேசியக் கழகம் (National Institute on Aging), 13. நரம்பியல் கோளாறுகளுக்கும் பக்க வாதத்திற்குமான தேசியக் கழகம் (National Institute of Neurological Disorders and Stroke) 14. செவித்திறன் குறைபாடு மற்றும் தொடர்பாடல் கோளாறுகளுக்கான தேசிய நிறுவனம் (National Institute on Deafness and other Communications Disorders), 15. பொது மருத்துவ அறிவியலுக்கான தேசியக் கழகம் (National Institute of General Medical Sciences) 16. செவிலியர் பணி மற்றும் ஆய்வுக்கான தேசியக் கழகம் (National Institute for Nursing Research), 17. மனித மரபணு ஆய்விற்கான தேசிய நிறுவனம் (National Institute for Human Genome Research), 18. பல்மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசியக் கழகம் (National Institute of Dental Research) மற்றும் 19. தேசிய மருத்துவ நூலகம் (National Library of Medicine) போன்ற 19 துணை அமைப்புகள் இந் நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்றது.

English

he organization within the U.S. Department of Health and Human Services (DHHS) that supports, coordinates, and conducts research into the causes, prevention, treatment, and cure of diseases. NIH has many component institutes, each specializing in a particular disease or health concern. Major components include the National Cancer Institute; the National Institute of Child Health and Human Development; the National Institute of Mental Health (NIMH); the National Institute of Allergy and Infectious Diseases; the National Heart, Lung, and Blood Institute: the National Institute of Arthritis and Musculoskeletal and Skin Diseases; the National Institute of Diabetes and Digestive and Kidney Diseases; the National Institute of Environmental Health Sciences; the National Institute of Alcohol Abuse and Alcoholism; the National Institute on Drug Abuse (NID A); the National Eye Institute; the National Institute on Aging; the National Institute of Neurological Disorders and Stroke; the National Institute on Deafness and other Communications Disorders; the National Institute of General Medical Sciences; the National Institute for Nursing Research; the National Institute for Human Genome Research; the National Institute of Dental Research; and the National Library of Medicine.