National Network for Social Work Managers (NNSWM)
சமூகப்பணி நிறுவன மேலாளர்களுக்கான பிணையம் / கூட்டிணைவு
தமிழ் விளக்கம்
சமூகப்பணி நிறுவன மேலாளர்கள், நிர்வாகிகள், கல்வியாளர்கள் மற்றும் ஆர்வமுடைய பிறரை உறுப்பினர்களாகக் கொண்டு, 1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தொழில்முறை சார் சுதந்திரமான அமைப்பு. சமூகப்பணி நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள் பற்றியும், சமூகப்பணி நிறுவனங்கள் மற்றும் நிர்வாகம் தொடர்புடைய ஆய்வுகளை ஊக்குவிக்கவும், (Administration in Social Work), சமூகப்பணி நிர்வாகம் தொடர்புடைய அனுபவப் பகிர்விற்கும் இடமளிக்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பிணையம் சமூகப்பணி நிர்வாகம் என்ற காலாண்டிதழையும், சமூகப்பணி நிர்வாகி (Social Work Executive) என்ற செய்தி மடலையும் வெளியிடுகிறது, இதனுடைய வருடாந்திர மாநாடுகளில் தெரிவு செய்யப்பட்ட சமூகப்பணி நிர்வாகிகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், சமூகப்பணி நிர்வாத்தில் சாதனை படைத்தவர்களுக்கு சிறப்பும் செய்யப்படுகிறது.
English
An independent professional association of social work managers, administrators, educators and others, founded in 1985, to provide a forum for common concerns, facilitate research, and disseminate knowledge about social work management. The network produces the quarterly journal Administration in Social Work and the quarterly newsletter Social Work Executive. At its annual conference it presents its Lifetime Achievement Award and the Exemplar Award to recognize excellence in social work management.