National Recovery Administration (NRA)
மீட்சிக்கான தேசிய நிர்வாகம்
தமிழ் விளக்கம்
ரூஸ்வெல்ட் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது ஏற்பட்ட கடுமையான பொருளாதார மந்தத்தை எதிர்கொள்ள, மேன்மைமிக்க சமுதாயம், வறுமைக்கு எதிரான யுத்தம், ஆற்றலோடு தொடங்குதல் வரிசையில் கொண்டுவரப்பட்ட புதிய ஒப்பந்தம் (New Deal) என்ற முயற்சியின் ஒரு கூறாக மீட்சிக்கான தேசிய நிறுவனம் 1933 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தொழிலகங்களுக்கிடையே ஏற்பட்டிருந்த ஆரோக்கியமற்ற கழுத்தறுப்புப் போட்டிகளை மாற்றி, நியாயமான போட்டிக்கான விதிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ள தொழிலதிபர்கள், தொழிற்சங்கங்கள் ஊக்குவிக்கப்பட்டார்கள். ஆரோக்கியமற்ற போட்டியைத் தவிர்த்தல், குறைந்தபட்சக் கூலி, நியாய விலை போன்ற பல நடவடிக்கைகள் இந்த மீட்பு நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
English
The federal organization established in 1933, early in President Franklin D. Roosevelt's first term, to take immediate action to solve problems arising from the economic crisis. Mostly involved with establishing new codes regulating businesses and labor, NRA was absorbed into other agencies by 1936.